திருமணத்தை மீறிய உறவு.. முதலிடத்தில் தமிழக நகரம்! டெல்லி கூட 2வதுதான்.. ஷாக் ரிப்போர்ட்!
சென்னை: திருமணத்தை மீறிய உறவுகள் விஷயத்தில் பொதுவாக டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்கள்தான் முன்னணியில் இருக்கும். ஆனால், தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட மாவட்டம் இந்த நகரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
Tier 2 என்று சொல்லப்படும் 2ம் கட்ட நகரங்களில், கிராமங்களின் தாக்கம் ஓரளவுக்கு இருக்கும். அக்கம் பக்கம் என்ன சொல்வார்களோ? நாலு பேரு.. நாலு விதமா பேசுவாங்களோ! என்றெல்லாம் அச்சம் இருக்கும். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. இந்தியாவில் திருமணம் மீதான பார்வை வெகுவாக மாறியிருக்கிறது என்று சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்கள் காட்டியுள்ளன.

திருமணத்தை மீறிய உறவு
'ஆஷ்லே மேடிசன்' என்பது திருமணமானவர்கள், ரசியமாக தொடர்புகளை தேடுவதற்கான ஒரு சர்வதேச வெப்சைட் ஆகும். இந்தியாவில் எந்த நகரத்தை சேர்ந்தவர்கள் இந்த வெப்சைட்டை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்கிற புள்ளி விவரம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில், முதல் இடத்தை காஞ்சிபுரம் பிடித்திருக்கிறது.
கோயில் நகரம்
கோயில் நகரம் என்று சொல்லும் காஞ்சிபுரமா? அச்சச்சோ அது புனிதமான நகரமாச்சே! என்று பல்வேறு தரப்பினரும் இந்த புள்ளி விவரத்தை பார்த்து ஷாக் ஆகியிருக்கின்றனர். டெல்லி கூட இரண்டாம் இடத்தில்தான் இருக்கிறது என்று வெளியான புள்ளி விவரங்களில் தெரிய வந்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் இந்தியர்களின் திருமண பார்வையை மாற்றியிருக்கிறது என்றும் உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
முந்தும் தமிழகம்
வெப்சைட் வெளியிட்டிருக்கும் முதல் 20 இடங்களில் முதல் இடத்தில் காஞ்சிபுரமும், அடுத்தடுத்த இடங்களில் டெல்லி, குருகிராம் என டெல்லியை சுற்றியிருக்கும் நகரங்களும் இடம் பிடித்திருக்கின்றன. இதில் ஆச்சரியப்படும் மற்றொரு விஷயம் என்னவெனில், இந்தியாவின் டாப் சிட்டிகளில் ஒன்றான மும்பை, இந்த லிஸ்ட்டில் முதல் 20 இடங்களில் இல்லை என்பதுதான். அதேபோல, தமிழகத்தின் கோயம்பத்தூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இந்த வெப்சைட் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏன் காஞ்சிபுரம் முன்னணியில் உள்ளது?
இந்த விஷயத்தில் காஞ்சிபுரம் முதல் இடத்தில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக.. காஞ்சிபுரம் இன்னும் முழுமையாக நகரமயமாக்கப்படாமல் இருக்கிறது. எனவே பெருநகரங்களில் இருப்பதை போல, திருமணத்தை மீறிய உறவுகள் சாதாரணமானவையாக இருப்பதில்லை. ஆகவே தங்கள் உறவுகளை ரகசியமாக மெயின்டெயின் செய்ய.. இந்த வெப்சைட்டை பயன்பாடு அதிகரித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இன்டெர்நெட் வளர்ச்சி
அதே சமயம்.. இந்நகரம் சென்னையின் புறநகர் பகுதிகளை சேர்த்து கணக்கில் எடுக்கப்பட்டிருக்கலாம். எனவே, இந்த பகுதி, பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சியை கண்டிருக்கிறது என்றும், ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகமாக இருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டு இந்த லிஸ்டில் காஞ்சிபுரம் 17வது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த 2025ம் ஆண்டு முதலிடத்திற்கு வந்து. இந்த ஆண்டும் முதல் இடத்தில் தொடர்கிறது. அதேபோல இந்த லிஸ்டில் 19வது இடத்தில் பெங்களூர் சிட்டியும், 20வது இடத்தில் திருவள்ளூரும் இடம் பிடித்திருக்கிறது.
இந்தியர்களின் கண்ணோட்டம்
இந்தியாவை பொறுத்தவரை, திருமணத்தை மீறிய உறவு என்பது சட்டப்படி குற்றம் கிடையாது. இதற்கு சிறை தண்டணையெல்லாம் கிடையாது. ஆனால், விவாகரத்து பெற இந்த காரணம் போதுமானது. அதே நேரம், திருமணத்தை மீறிய உறவு காரணமாக தம்பதியில் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டால், தற்கொலைக்கு தூண்டினார் என்பதற்காக திருமணத்தை மீறிய உறவில் இருப்பவருக்கு சிறை தண்டனை கிடைக்கும்.
எது எப்படி இருந்தாலும், வாழ்க்கை நெறிமுறை என்று ஒன்று இருக்கிறது. உறவு பிடிக்கவில்லை எனில் விவாகரத்து செய்து, பிடித்தவர்களோ இருக்கலாம். அதுதான் சரியானதாகவும் இருக்கும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய சமூகம் மறுமணம் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளாதவரை அல்லது விவாகரத்து விஷயத்தை குடும்ப கவுரவத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கும் வரை, ரகசிய உறவுகள் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications