மனித உடலில் தங்கம் இருக்கு.. ஆய்வாளர்கள் சொன்ன ஆச்சர்ய தகவல்.. பயன்படுத்த முடியுமா?
சென்னை: ஒவ்வொரு மனிதனின் உடலிலும் தங்கம் உள்ளது என் பகுப்பாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாம்.. மனித உடலில் மிகச் சிறிய அளவில் தங்கம் இயற்கையாகவே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த தங்கம் எவ்வாறு உடலில் காணப்படுகிறது, அதை பிரித்தெடுத்து பயன்படுத்த முடியுமா? என்ற கேள்விகளுக்கு அறிவியல் ஆய்வாளர்கள் சொல்வதை இங்கு காணலாம்.
பூமியில் கிடைக்க கூடிய அரிய தனிமங்களில் ஒன்றாக தங்கம் உள்ளது. ஒருநாட்டின் பண மதிப்பை நிர்ணயிக்கும் அளவுக்கு தங்கத்திற்கு அபரிமிதான மதிப்பு உள்ளது. பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் இன்னும் தோராயமாக 30 ஆண்டுகளில் அவை இல்லாமல் போகும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மனித உடலில் தங்கம்
பூமியில் கிடைக்க கூடிய இந்த அரியவகை தனிமம், மனித உடலிலேயே இயற்கையாகவே இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அது எப்படி என்று கேட்கிறீர்களா? தங்கம் மனித உடலில் எவ்வாறு உருவாகிறது.. அதை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பது பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.
ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சுமார் 0.2 மி.கிராம் தங்கம் உள்ளது என்று பகுப்பாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, 1 கிராம் தங்கத்தின் அளவான 1000 மில்லி கிராம் அளவில் 0.0002 கிராம் என்ற மிகக் குறைந்த அளவில் மனித உடலில் தங்கம் காணப்படுகிறது. மண்ணில் புதைந்து கிடக்கும் தங்கம் மனித உடலில் எப்படி வருகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். பொதுவாக தங்கம் இயற்கையாக மிக சிறிய அளவில் மண்ணில் குடிநீரில், தாவரங்களில் உணவு பொருட்களில் காணப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அணுக்களாக மட்டுமே உள்ளது
தினமும் உணவு மற்றும் தண்ணீர் மூலம் மிக மிக நுண்ணிய அளவில் தங்கம் உடலில் சேர்கிறது. இந்த மிக சிறிய அளவு தங்கம் உடலில் உள்ள ரத்தத்தில் எலும்புகளில் பல்வேறு திசுக்களில் நுண்ணிய அளவில் காணப்படுகிறது. ஆனால், இந்த தங்கம் என்பது சாதாரணமாக காணப்படும் நகை போன்ற தங்க துண்டுகளாக இருக்கும் நினைத்துவிட வேண்டாம். இவை வெறும் அணுக்களாக மட்டுமே உள்ளது. மனித உடல் இயங்க பல்வேறு வகையான தாதுக்கள் உலோக சத்துகள் தேவைப்படுகின்றன.
கால்சியம், துத்தநாகம் என பல வகையான தாதுக்கள் மனிதன் இயங்க தேவைப்படும். அந்த வகையில் இயற்கையாக பூமியில் இருக்கும் தங்க சத்து, காய்கறிகள் - இலைகள் மூலம் உறிஞ்சப்பட்டு மனிதன் அவற்றை உண்ணும் போது மனித உடலில் சென்று சேருகிறது. நம் உடல் இயக்கத்திற்கு தங்க சத்து என்பது அவ்வளவு அத்தியாவசியம் இல்லை. இரும்பு, துத்தநாகம், செம்பு போன்றவை மனித உடல் இயக்கத்திற்கு அவசியமான தாது சத்துகளாக கருதப்படுகின்றன.
பயன்படுத்த முடியுமா?
ஆனால், தங்கத்திற்கு உடலில் ஒரு முக்கியமான உயிரியல் செயல்பாடுகள் இருப்பது இதுவரை எந்த ஆய்விலும் உறுதி செய்யப்படவில்லை. மனித உடலில் காணப்படும் இந்த தங்கத்தை தொழில் நுட்பரீதியாக பிரித்து எடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறும் கருத்தாக உள்ளது. ஆனால் அங்கேதான் ட்விஸ்ட்டே இருக்கிறது. அதாவது, மனித உடலில் இருக்கும் தங்கத்தை பிரித்தெடுக்க ஆகும் செலவு கிடைக்கும் தங்கத்தின் மதிப்பை விட பல ஆயிரம் மடங்கு அதிகம். எனவே அதற்கு சாத்தியம் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதுபோக இவ்வளவு ரிஸ்க் எடுத்து இவ்வளவு குறைந்த அளவு தங்கத்திற்காக எடுப்பது எந்த வகையிலும் பயன் இல்லை என்பதே ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications