பாம்பு பாம்பு என கத்திய சியா.. 400 அடி மலை உச்சியில் புனே பெண்ணின் மாஸ்டர் பிளான்.. சிக்கியது எப்படி
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புனே பகுயில் நடந்த கொலை சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அங்கு நீங்கவில்லை.. அதிகம் படித்த, அதிகம் வசதி படைத்த குடும்பத்திலேயே இப்படி நடந்துள்ளது பலமடங்கு அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. சம்பவ நேரத்தில், குற்றத்தில் தொடர்புடைய பெண் என்ன செய்தார்? இதுகுறித்து போலீசார் சொல்வது என்ன? என்பன போன்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
புனே தொழிலதிபர் பெயர் விஷால் அகர்வால்.. இவர்களது மகன் கேதன் விஷால்.. 25 வயதாகிறதுபெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வந்தார். இவருக்கும் சியா கோயல் என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

400 அடி பள்ளம் - 17 கோடி ரூபாய்
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு சொகுசு அரண்மனையில் 17 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக விருந்தினர்களை அழைத்து வர இரண்டு விமானங்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த ஜூன் 18-ம் தேதியன்று சியா கோயல் தனது வருங்கால கணவர் கேதனை புனே அருகில் உள்ள லோஹாகட் கோட்டைக்கு ஜாலியாக டூர் செல்லலாம் என்று கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் எதிர்பார்த்தவிதமாக அங்கு 400 அடி உயர மலை உச்சியிலிருந்து கேதன் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் கேதன்.
கேதன் அழுது நாடகம்
இதுகுறித்து சியாவிடம் போலீசார் விசாரித்தனர்.. "நாங்கள் போட்டோ எடுத்து கொண்டிருந்தோம்.. திடீரென காற்று பலமாக வீசியது.. அந்த நேரத்தில் போட்டோ எடுக்க முயன்ற கேதன் தவறி கீழே விழுந்துவிட்டார்" என்று சியா போலீசாரிடம் கூறி கதறி அழுது சொன்னார்..
இதையடுத்து கேதனின் உடலை மீட்ட போலீசார், மீண்டும் சியாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலங்களை சொன்னதால், சந்தேகமடைந்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் சியாவிற்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை என்பதும், அவர் தான் வேலை செய்யும் இடத்தில் சேத்தன் சவுத்ரி என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்ததும் தெரியவந்தது. பணக்கார மணமகன் என்பதால் குடும்பத்திற்காக சம்மதித்த சியா, தன் காதலுக்கு தடையாக இருந்த கேதனை விபத்து போலக் காட்டிக் கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதும் அம்பலமானது.
போலீஸ் அதிகாரி சொல்வதென்ன
இதுகுறித்து போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் சொல்லும்போது, "கேதன், ஷியாவுடன் நட்பில் இருந்துள்ளார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்துக்காக ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையை ரூ.17 கோடிக்கு புக்கிங் செய்து இருந்தனர். அத்துடன் விருந்தினர்களை அழைத்துச்செல்ல 2 விமானங்களும் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் ஷியா தான் வேலை செய்த இடத்தில் சேத்தன் என்பவரையும் காதலித்து வந்துள்ளார். அவர்களது உறவுக்கு கேதன் தடையாக இருந்ததால், சேத்தனும், ஷியாவும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி கேதன் அகர்வாலை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர்.
ஜாலி டூர் நாடகம்
ஜாலி டூர் என்று சொல்லிதான் ஷியா கேதனை லோஹாகட் கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் சேத்தனையும் ஷியா அந்த இடத்திற்கு வரவழைத்துள்ளார்.. பிறகு 2 பேரும் சேர்ந்து கேதனை பின்னாலிருந்து பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு, விபத்து என்று சொல்லி நாடகமாடி உள்ளனர்" என்றார்.
சம்பவ இடத்தில் ஷியாவின் காதலன் சேத்தனும் இருந்ததை செல்போன் சிக்னல் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். இவர்களின் சிசிடிவி காட்சிகள், செல்போன் அழைப்புகள் மற்றும் நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள் அடிப்படையில் சியா மற்றும் சேதன் இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
பாம்பு பாம்பு பாம்பு
ஆனால், கடந்த ஜூன் 14-ம் தேதியே கேதனை அதே மலையில் இருந்து தள்ளிவிட முயன்றாராம் ஷியா.. அப்போது "பாம்பு, பாம்பு" என்று சியா கூச்சலிட்டு நாடகமாடியே, மலையிலிருந்து தள்ளிவிட முயன்றதாக இப்போது விசாரணையில் தெரியவந்துள்ளது..
அதுமட்டுமல்ல, கல்யாணத்துக்கு முன்பே, போட்டோக்களை எடுக்க பாலி தீவுக்குச் செல்ல கேதன் திட்டமிட்டிருந்தாராம்.. ஆனால் ஷியா திட்டமிட்டு காரில் வைத்து கேதனின் பாஸ்போர்ட்டைத் திருடி மறைத்து, அந்தப் பயணத்தையும் தடுத்து விட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications