பாமகவில் இணையும் தமிழ் மாநில முஸ்லிம் லீக்
சென்னை:
பாமகவுடன் தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியை இணைக்கப் போவதாக அக் கட்சியின் பொது செயலாளர் அப்துல்அஜீஸ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அஜீஸ் கூறியதாவது:-
தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 15ம் தேதி சென்னையில் நடந்தது. அதில், நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாதகட்சி தலைவர் எஸ். ஷேக் தாவூத்தை, அவரது பதவியில் இருந்து நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் மாநில முஸ் லிம் லீக் கட்சியின் பெயரையோ கொடியையோ அவர் பயன்படுத்தினால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கப்படும். மேலும் கட்சியைக் கலைத்து விட்டு அனைத்து நிர்வாகிகளுடன்பாமகவில் இணைவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி வருவதாலும்,இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தி வருவதாலும் பாமகவில் இணையமுடிவெடுக்கப்பட்டது என்றார் அஜீஸ்.
இன்று மாலை 5 மணிக்கு சைதாப்பேட்டை வர்த்தக அறக்கட்டளை கட்டடத்தில் நடைபெறும் விழாவில் தமிழ்மாநில முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி முன்னிலையில் அக்கட்சியில் இணைகிறார்கள்.


Click it and Unblock the Notifications
