ஒலிம்பிக்: வெள்ளி பதக்கம் வென்றது இந்தியா
ஏதென்ஸ்:
ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா இன்று வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
இன்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (24) இந்தப் பதக்கத்தை வென்றார்.இந்தியா பெறும் முதல் வெள்ளிப் பதக்கம் இது தான்.
இந்திய ராணுவத்தின் முன்னாள் மேஜரான சிங், டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 179புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
ஐக்கிய அரபு நாடுகளின் ஷேக் அகமத் அல்-மக்தும் 189 புள்ளிகள் வென்று தங்கப் பதக்கத்தைவென்றார். சீனாவின் வாங் ஷாக் வெண்கலம் வென்றார்.
ஹாக்கி:
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இன்று இந்திய அணி தென் ஆப்ரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது.
ஹாக்கியில் பி பிரிவில் இடம் பெற்றிருக்கும் இந்திய அணி முதல் சுற்றில் ஹாலந்திடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.இதனையடுத்து இரண்டாவது சுற்றுப் போட்டியில் இன்று இந்தியா தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது.
தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, தன்னம்பிக்கையுடன் உள்ளது.
போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஜெர்ஹார்டு ராக் கூறியதாவது:
ஹாலந்திற்கு எதிரான போட்டியில் பந்தை பாஸ் செய்வதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் காரணமாகவும், அனுபவம் இல்லாதஇளம் வீரர்களின் தவறுகளாலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இனி வரும் போட்டிகளில் இந்தத் தவறுகள் தொடராதுஎன்று நம்புகிறேன்.
அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். எனவே வீரர்களின்செயல்பாட்டில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என்றார்.
வில் வித்தை:
ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் தனிநபர் பிரிவு -போட்டியில் இன்று இந்தியாவின் ரீனா குமாரி மற்றும் சுமங்கள ஷர்மாவும்,குத்துச்சண்டை பிளை வெயிட் 51 கிலோ பிரிவில் -அகில்குமாரும் பாந்தம் வெயிட் 54 கிலோ பிரிவில் திவாகர் பிரசாத்தும்விளையாடுகின்றனர்.
டென்னிஸ், துப்பாக்கி சுடுதல்:
ஆடவர் இரட்டையர் டென்னிஸ் 2-வது சுற்றில் பயஸ், பூபதி இணையும், பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் 2-வது சுற்றில்- நிகில்கனேட்கரும், ஆடவர் டபுள் டிராப் பிரிவு - துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ராஜ்யவர்தன் சிங் ரதோரும், பாய்மரப் படகுப்போடடியில் மாலவ் ஷிராப் மற்றும் சுமீத் படேலும் இன்று விளையாடுகின்றனர்.
பதக்கப் பட்டியல்:
ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ள முதல் பத்து நாடுகள்:
1. சீனா- 10 தங்கம்- 4 வெள்ளி- 1 வெண்கலம்
2. ஆஸ்திரேலியா 6- 2- 5
3. ஜப்பான் 5- 1- 1
4. அமெரிக்கா 3- 5- 5
5. பிரான்ஸ் 2- 2- 3
5. இத்தாலி 2- 2 -1
6. துருக்கி 2- 0- 1
7. உக்ரைன் 2- 0 -1
8. ரஷ்யா 1- 5- 2
9. ஜெர்மனி 1- 2- 1
10. ஹங்கேரி 1- 1- 1
11. யுஏஈ- 1-0-1
12. இந்தியா 0- 1- 0
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications