காவிரி நடுவர் மன்ற நீதிபதிகள் தமிழகம் வருகை
சென்னை:
தமிழக, கர்நாடக காவிரிப் பாசனப் பகுதிகளில் நடுவர் மன்ற நீதிபதிகள் ஒரு வார காலம் நேரில்ஆய்வு நடத்த உள்ளனர்.
இதற்காக வரும் 23ம் தேதி அவர்கள் தமிழகம் வருகின்றனர். 29ம் தேதி வரை அவர்கள் ஆய்வுசெய்வர்.
இந்த நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கர்நாடகம் 205டி.எம்.சி. நீரைத் தர வேண்டும். ஆனால், தீர்ப்பை கர்நாடகம் மதித்ததே இல்லை. இந் நிலையில்விரைவில் தனது இறுதித் தீர்ப்பையும் வழங்க நடுவர் மன்றம் திட்டமிட்டுள்ளது.
அதற்காக நடுவர் மன்ற நீதிபதி என்.பி. சிங்கின் உத்தரவின்பேரில், மன்றத்தின் உறுப்பினர்களாகஉள்ள நீதிபதிகள் என்.எஸ்.ராவ், சுதீர் நாராயணன் ஆகியோர் தமிழக காவிரிப் பாசன பகுதிகளைபார்வையிட வருகின்றனர்.
காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர் மட்டம், மழையளவு, பாசன வசதிகள்,பயிர்களின் நிலை ஆகியவை குறித்து நேரில் ஆய்வு நடத்துவதோடு, இரு மாநிலஅதிகாரிகளுடனும் நடுவர் மன்ற நீதிபதிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
தமிழக சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு அடுத்த மாதம் கர்நாடகத்தில் இக் குழு ஆய்வுநடத்துகிறது. பெங்களூருக்கு காவிரியில் இருந்து குடிநீர் வழங்கப்படுவது குறித்தும் நீதிபதிகள்ஆய்வு செய்வர்.
இந்த நீதிபதிகளின் அறிக்கையை வைத்து நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வெளியிடவுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications