சிபிஐ, மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து?
டெல்லி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அங்கீகாரத்தையும், மதிமுக, பாமக உள்ளிட்ட ஒன்பது கட்சிகளின் மாநிலஅங்கீகாரத்தையும் ஏன் ரத்து செய்யக் கூடாது என்று அக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
ஒவ்வொரு மக்களவைத் தேர்தலுக்குப் பின்னும், கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் மற்றும் அதன் மக்களவைஉறுப்பனர்கள் எண்ணிக்கை அடிப்படையில், அக் கட்சிகளின் தேசிய அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம்மறுபரிசீலனை செய்யும்.
ஒரு கட்சி தேசிய அங்கீகாரத்தைப் பெற, குறைந்தது 4 மாநிலங்களில் தலா 6 சதவீத ஓட்டுகள் பெற்றிருக்கவேண்டும் அல்லது மக்களவையில் 11 உறுப்பினர்களை பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களவையில் 10 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். கேரளா, மணிப்பூர்மாநிலங்களில் மட்டுமே ஆறு சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளது. எனவே, கட்சியின் தேசிய அங்கீகாரத்தை ஏன்ரத்து செய்யக் கூடாது? என்று கேட்டு, அக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இம் மாதம்31ம் தேதிக்குள் இதற்கு பதிலளிக்கும்படி கூறப்பட்டுள்ளது.
அதேபோல், மாநில கட்சி அங்கீகாரத்தை தக்க வைக்க, சட்டசபையில் உள்ள மொத்த இடங்களில் 3 சதவீதஇடங்களையோ அல்லது மாநிலத்தில் ஆறு சதவீத ஓட்டுகளைப் பெற்று, சட்டசபையில் இரண்டு இடங்களையோபெற்றிருக்க வேண்டும்.
இந்த விதிகளைப் பூர்த்தி செய்யாத மதிமுக, பாமக, திரிபுராவில் திரிணமுல் கட்சி, கேரளாவில் கேரள காங்கிரஸ்,பஞ்சாப்பில் சிரோமணி அகாலி தளம் (மான்), மேகாலயாவில் மேகாலயா மக்கள் ஜனநாயகக் கட்சி, அசாமில்இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகிய ஒன்பது கட்சிகளுக்கு மாநில அங்கீகாரத்தை ஏன் ரத்துசெய்யக் கூடாது என்று கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதிமுகவும், பாமகவும் பாண்டிச்சேரியில் தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை.தமிழகத்தில் இக்கட்சிகளின் மாநில அங்கீகாரம் தொடர்கிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications