இன்று குருப்பெயர்ச்சி: ஆலங்குடியில் விழா
ஆலங்குடி:
இன்றிரவு (வியாழக்கிழமை) 11.04 மணிக்கு குருப் பெயர்ச்சி நடைபெறுவதையொட்டி திருவாரூர் மாவட்டம்ஆலங்குடியில் உள்ள குரு பகவான் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன.
இங்குள்ள ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. வழக்கமாகஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடக்கும்.
இந்த ஆண்டு வியாழக்கிழமையன்றே (இன்று) குருப் பெயர்ச்சியும் நடக்கிறது. தட்சிணாமூர்த்தியே குருபகவானாக அவதாரம் எடுத்து இந்தத் திருத்தலத்தில் அருள் பாலிப்பதாக ஐதீகம்.
இன்று இரவு 11.04 மணிக்கு குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசியில் பிரவேசம் செய்கிறார். இந்தகுருப் பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனைகள் நடந்து வருகின்றனர். இத் திருக் கோவிலின் பிரசாதத்தை தபால்மூலம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிர்வாக அதிகாரி,
ஆபத்சகாயேஸ்வரர் கோவில்,
ஆலங்குடி,
திருவாரூர் மாவட்டம்
என்ற முகவரிக்கு ரூ. 100யை மணியார்டர் செய்து, அதனுடன் உங்களது பெயர், நட்சத்திரம், ராசி குறித்தவிவரங்களையும் அனுப்பி வைத்தால், பூஜைகள் செய்யப்பட்டு தபால் மூலமே உங்களது முகவரிக்கு பிரசாதம்அனுப்பி வைக்கப்படும்.
குரு பகவானை நேரில் வந்து தரிசனம் செய்ய விரும்புவோர், கொண்டைக் கடலை மாலை, மஞ்சள் துண்டைசாமிக்கு சாற்றியும், நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.
இன்று குருப் பெயர்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இந்தத் திருத்தலத்துக்கு வருகை தர உள்ளதால்,அங்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தஞ்சை, கும்பகோணம், திருவாரூர் நகர்களில் இருந்து சிறப்புப்பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் மன்னார்குடி செல்லும் வழியில் அமைந்திருக்கிறதுஆலங்குடி.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications