குருவின் பிற திருத் தலங்கள்
ஆலங்குடி தவிரவும் தமிழகத்தில் குரு பகவானுக்கு மேலும் பல கோவில்கள் உள்ளன.
பெரும்பாலான ஆலயங்களில் நவ கிரஹங்களுக்கு தனி சன்னதிகள் அமைந்துள்ளன. அங்கும்குருவை வழிபடலாம். அதே போல தட்சிணாமூர்த்தியே குரு பகவானாக அருள் பாலிப்பதால்,தட்சிணாமூர்த்தி சுவாமி சன்னதி உள்ள கோவில்கள் அனைத்திலும் வழிபாடு நடத்தலாம்.
குருவின் ஆலயங்கள்:
தஞ்சை மாவட்டம் தென் குடித்திட்டை என்ற கிராமத்தில் வஷிஸ்டேஸ்வரர் ஆலயம் உள்ளது.திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இத் திருத்தலத்தில் குரு பகவான், ராஜகுருவாகஅவதரித்திருக்கிறார்.
இங்கு தனி சன்னதியில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் நின்ற கோலத்தில் இருக்கிறார் குரு.இந்த நிலையில் குருவை தரிசிப்பது அளவற்ற நற்பலன்களைத் தருமாம். குரு பரிகாரம் செய்ய இக்கோவில் மிகச் சிறந்தது.
அதே போல சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் உள்ள தட்சிணாமூர்த்திஆலயமும் குருவின் ஆலயமே. இங்கு குருபகவானை அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி என்றுஅழைக்கிறார்கள்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் வைகைக் கரையில்அமைந்துள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலும் குரு பகவானின் திருத் தலமே.
இங்கு சக்கரத்தாழ்வாருக்கு அருகே எழுந்தருளி அருள் பாலிக்கிறார் குரு பகவான். தடைகளைஉடைத்து, கேட்டதைத் தந்து வாழ் வைப்பவர் சக்கரத்தாழ்வார் என்பது ஐதீகம். இந்தத் திருத் தலத்தில்குருவே சக்கரத்தாழ்வாரை நோக்கி கடும் தவம் செய்துள்ளார்.
அதே போல திருச்செந்தூர் முருகன் ஆலயமும் குருத் தலமாக விளங்குகிறது. இங்கு முருகப்பெருமானை குருவே பூஜித்துள்ளார். எனவே, குருப் பரிகாரம் வேண்டுவோர் இங்கு வந்து முருகப்பெருமானை வணங்கினாலே முழுமையான பலன் கிடைக்கும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications