இராக்: இந்தியர்களை மீட்க பணம் தர மாட்டோம்
குவைத் - டெல்லி:
இராக்கில் கடத்திச் செல்லப்பட்ட 3 இந்தியர்களை மீட்க மத்திய அரசு பண தராது என்று வெளியுறவுத் துறை இணைஅமைச்சர் அகமது தெரிவித்தார்.
இராக்கில் இந்தியர்கள் கடத்தப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. கடந்த 8ம் தேதி பிணைக்கைதிகளைவிடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இருந்து குவைத் நிறுவனம் விலகியது. அதன்பின் அவர்களை விடுவிக்கும்முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந் நிலையில், மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது வெளியுறவுத் துறை இணையமைச்சர் அகமது இதுதொடர்பாக கூறியதாவது:
மத்திய அரசு இந்த பிரச்சினையை கவனமாகக் கையாண்டு வருகிறது. பிணைக்கைதிகளை விடுவிக்க இந்தியாபணம் தராது. தீவிரவாதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தையும் நடத்தாது. அதே நேரத்தில் தீவிரவாதிகளுடனானபேச்சுவார்த்தைக்கு குவைத் போக்குவரத்து நிறுவனத்திற்கு முழு ஆதரவு தரும்.
இராக் செல்ல இந்தியர்களுக்கு விசா தருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இராக்கில் இந்தியர்கள் நாடு திரும்பவிரும்பினால் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், இப் பிரச்சினையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரத்தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் எதிர்க்கட்சிகளின்ஆலோசனைகளையும் மத்திய அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.
இதற்கிடையே குவைத் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ராணா அபு சைனே நிருபர்களிடம் கூறியதாவது:
பிணைக் கைதிகள் பத்திரமாக இருப்பதை இராக்கில் உள்ள எமது நண்பர்கள் மூலமும் வேறு சில வழிகளிலும்உறுதி செய்துள்ளோம். கடத்தல்காரர்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும்பலனளிக்கவில்லை.
கடத்திச் செல்லப்பட்டவர்களை பத்திரமாக விடுவிக்க எங்களால் ஆன முயற்சிகளைச் செய்துவருகிறோம் என்றார்.
பிணைக் கைதிகள் பத்திரமாக இருப்பதை வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அகமதும் உறுதி செய்துள்ளார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications