அரையிறுதியில் பயஸ், பூபதி: தங்கம் வாய்ப்பு
ஏதென்ஸ்:
ஒலிம்பிக் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதிஜோடி அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில் பயஸ், மகேஷ் இணை ஜிம்பாப்வேயின் வெய்னி பிளாக், கெவின் உலையட் இணையை எதிர்த்துவிளையாடியது. இதில், 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பயஸ், பூபதி இணை அபார வெற்றி பெற்றுஅரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
முதல் சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் ஜோடியையும், இரண்டாவதுசுற்றில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஜோடியையும் வீழ்த்தினார்கள். நட்சத்திர வீரர்களைஆரம்பத்திலேயே பயஸ், பூபதி இணை தோற்கடித்து விட்டதால், இந்தியாவுக்கு தங்கப் பதக்க வாய்ப்புஅதிகரித்துள்ளது.
மல்லேஸ்வரி விலகல்:
பளுதூக்குதலில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கர்ணம் மல்லேஸ்வரி, தசைபிடிப்பு காரணாகபோட்டி-யி-லி-ருந்து பாதி-யி-லேயே வில-கி-னார்.
ஸ்னாட்ச் பிரி-வில் 100 கி.கி. எடையை முதல் முயற்சி-யின்போது, முழுங்கால் வரை கூட அவரால் தூக்கமுடிய-வில்லை. இதையடுத்து அவர் நேராக மருத்துவ அறைக்கு சென்று விட்டார். முது-குப் பகு-தி-யில் தசை பிடிப்புஏற்பட்ட-தால் போட்டி-யில் இருந்து விலகுவதாக பின்னர் தெரி-விக்கப்பட்டது.
போதை மருந்து புகார்:
மற்றொரு இந்திய வீராங்க-னை-யான பிர-திமா குமா-ரி-யும் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க-வில்லை எனமுதலில் தெரிவிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டதானாலேயே அவர்போட்டியிலிருந்து நீக்கப்பட்டார் என்று இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
போட்டி தொடங்குவதற்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்க மருந்து உபயோகித்திருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போட்டியில் பங்கேற்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. மொராக்கோ,துருக்கி, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளும் இதேபோல் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர்.
ஹாக்கி: இந்தியா- ஆஸி. மோதல்:
ஹாக்கி-யில் இந்திய அணி ஆஸ்தி-ரே-லி-யாவை எதிர்த்து இன்று விளையாடுகிறது.
முதல் போட்டியில் ஹாலந்தி-டம் தோற்ற இந்திய அணி, தென்ஆப்ரிக்கா அணியுடனான போட்டியில் சுதாரித்துக்கொண்டு வெற்றி பெற்றது. இந் நிலையில் வலுவான அணியான ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி இன்றுபலப்பரிட்சை நடத்துகிறது.
ரத்தோ-ருக்கு வீடு: ராஜஸ்தான் அரசு
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப்ப-தக்கம் வென்ற ரத்தோ-ருக்கு ரூ.11 லட்சம் ரொக்கப் பரிசும், ஜெய்ப்பூரில்ரூ.8.80 லட்சம் மதிப்பில் வீடும் வழங்கப்ப-டும் என அவர் பிறந்த மாநிலமான ராஜஸ்தான் அரசு அறி-வித்துள்ளது.
மேலும் இந்திய ஒலிம்பிக் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் நிறுவனமான சாம்சங் ரூ.10 லட்சம் பரிசுவழங்குகிறது.
பதக்கப் பட்டியல்: டாப் 10
1. சீனா- 11 தங்கம்- 7 வெள்ளி- 4 வெண்கலம்
2. அமெரிக்கா 10- 10- 9
3. ஜப்பான் 8- 3- 2
4. ஆஸ்திரேலியா 6- 4- 6
5. உக்ரைன் 5- 1- 1
6. ரஷ்யா 3- 6- 6
7. இத்தாலி 3- 4- 2
8. பிரான்ஸ் 3- 3- 4
9. ஜெர்மனி 3- 2- 5
10. கொரியா 2- 5- 3
இந்தியா ஒரு வெள்ளியுடன் பதக்கப் பட்டியலில் 31வது இடத்தில் உள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications