புதிய தலைமை செயலகம்: காலி வேலைகள் ஆரம்பம்
சென்னை:
ரூ. 50 கோடிக்கு மேலான செலவில் புதிய கட்டடங்கள் கட்ட மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதிபெற வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அனுமதியைப்பெறாமலேயே தலைமைச் செயலகம் கட்டும் பணியை தமிழக அரசு துவக்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 500 கோடி செலவில் 24.7 ஏக்கரில் தலைமைச் செயலகம்கட்ட முதல்வர் ஜெயலலிதா மக்களவைத் தேர்தலுக்கு முன் அடிக்கல் நாட்டினார். 5 தளங்களுடன் இக்கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்தக் கட்டுமானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.
ஆனால், தேர்தல் தோல்விக்குப் பின் சிறிது அமைதி காத்த தமிழக அரசு கடந்த ஜூலை 29ம் தேதிதலைமைச் செயலகம் கட்ட டெண்டர் கோரியது.
இதையடுத்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரான திமுகவைச் சேர்ந்த ராஜா, ரூ. 50 கோடி மதிப்பிலானதிட்டங்கள், 1,000 பேர் பணியாற்றும் அலுவலகங்கள், ஒரு நாளைக்கு 10,000 லிட்டர் கழிவைவெளியேற்றும் கட்டடங்கள் கட்ட மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்றஆணையைப் பிறப்பித்தார்.
முன்பு டி.ஆர். பாலு சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது பிறப்பிக்கப்பட்ட வரைவு ஆணையைராஜா அதிகாரப்பூர்வ உத்தரவாக்கினார்.
இந் நிலையில் தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப கட்டப் பணிகளை மீண்டும்தொடங்கியுள்ளது தமிழக அரசு. சில கட்டடங்களை இடிப்பதற்கு வசதியாக அவை இடமாற்றம்செய்யப்பட்டு வருகின்றன.
சர்தார் படேல் சாலையில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் காலி செய்யப்பட்டு வருகிறது.இதில் உள்ள பொருள்கள் இரவு, பகலாக லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையம் இனி கிண்டியில் உள்ள வேளாண்மைத் தொழில் கட்டடத்தில் இருந்து செயல்படும்.
அதே போல புள்ளி விவர மையம், பொருளாதார ஆய்வு நிறுவனம், ஜெம் பள்ளி, சென்னை ஸ்கூல்ஆப் எக்கனாமிக்ஸ் ஆகியவை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்துக்கு மாற்றப்படுகின்றன.
அரசு தகவல் மையமும் கிண்டி சிறுதொழில் மேம்பாட்டுக் கழகக் கட்டடத்துக்கு மாற்றப்படுகிறது.
இவ்வாறு இடமாற்றத்தால் காலி செய்யப்படும் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளில்(அதிமுக ஆட்சி காலத்துக்குள்) ஹெலிகாப்டர் வந்திறங்கும் வசதி, சென்ட்ரலைஸ்ட் ஏசி வசதியுடன்புதிய தலைமைச் செயலகத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications