அதிமுக வழக்கை தள்ளுபடி செய்ய தீதன் மனு
சென்னை:
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மலைச்சாமி, பி.ஜி.நாராயணன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குக்குதள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு கணக்குத் தணிக்கை அதிகாரி தீதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
தமிழக அரசு தொடர்பான கணக்குத் தணிக்கை அறிக்கையை தீதன் பத்திரிகைகளுக்கு வெளியிட்டதுவிதிமுறைகளை மீறிய செயல் என்றும், அவர் பதவியில் நீடிக்கத் தகுதி இல்லை என்றும் அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்க தீதனுக்கு உயர்நீதிமன்றம் ஒருவாரத்துக்குத் தடை விதித்தது.
இந் நிலையில் தீதன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் தவறான முறையிலோ, சட்ட விரோதமாகவோ இந்தப் பதவியை அடையவில்லை. எனவே எனக்கு எதிராகத்தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும்.
கணக்கு தணிக்கை அறிக்கையை பத்திரிகைகளுக்கு நான் வெளியிட்டது தவறு என்றும், அதற்கு எனக்கு அதிகாரம்இல்லை என்றும் மனுதாரர்கள் கூறியுள்ளனர். கணக்குத் தணிக்கை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபிறகு அந்த அறிக்கையின் முக்கிய விபரங்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கலாம் என்று இந்தியக்கணக்குத் தணிக்கை அதிகாரி எனக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறார்.
ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அந்த மாநில கணக்குத் தணிக்கை அதிகாரிகள் பத்திரிகையாளர்கூட்டத்தை நடத்தியுள்ளனர். எனவே இது ஒன்றும் புதிதல்ல. வழக்கமான ஒன்றுதான்.
ஜூலை 31-ம் தேதி நான் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்ததாக கூறியிருப்பது தவறு. கடந்த 2-ம் தேதிதான்பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்தேன். நான் சொன்ன தகவல்கள் சில பத்திரிகைகளில் தவறாகபிரசுரிக்கப்பட்டுள்ளன.
அதிமுகவினர் தங்கள் மனுவில் தவறான சொற்களால் என்னை விமர்சித்துள்ளனர். அச்சொற்களை அந்த மனுவில்இருந்து நீக்க வேண்டும். மேலும் அவர்களது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீதன் கூறியுள்ளார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications