குருப்பெயர்ச்சி: ஆலங்குடியில் விழா
ஆலங்குடி:
நேற்றிரவு (வியாழக்கிழமை) 11.04 மணிக்கு குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசியில் பிரவேசித்தார்.
இதையொட்டி திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள குரு பகவான் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள்நடைபெற்று வருகின்றன. அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இங்குள்ள ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. வழக்கமாகஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடக்கும். இந்த ஆண்டுவியாழக்கிழமையன்றே குருப் பெயர்ச்சியும் நடந்தது சிறப்பு வாயந்ததாகக் கருதப்படுகிறது.
தட்சிணாமூர்த்தியே குரு பகவானாக அவதாரம் எடுத்து இந்தத் திருத்தலத்தில் அருள் பாலிப்பதாக ஐதீகம்.
இத் திருக் கோவிலின் பிரசாதத்தை தபால் மூலம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிர்வாக அதிகாரி,
ஆபத்சகாயேஸ்வரர் கோவில்,
ஆலங்குடி,
திருவாரூர் மாவட்டம்
என்ற முகவரிக்கு ரூ. 100யை மணியார்டர் செய்து, அதனுடன் உங்களது பெயர், நட்சத்திரம், ராசி குறித்தவிவரங்களையும் அனுப்பி வைத்தால், பூஜைகள் செய்யப்பட்டு தபால் மூலமே உங்களது முகவரிக்கு பிரசாதம்அனுப்பி வைக்கப்படும்.
குரு பகவானை நேரில் வந்து தரிசனம் செய்ய விரும்புவோர், கொண்டைக் கடலை மாலை, மஞ்சள் துண்டைசாமிக்கு சாற்றியும், நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.
குருப் பெயர்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இந்தத் திருத்தலத்துக்கு வருகை தந்துள்ளதால், அங்குவிரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தஞ்சை, கும்பகோணம், திருவாரூர் நகர்களில் இருந்து சிறப்புப்பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் மன்னார்குடி செல்லும் வழியில் அமைந்திருக்கிறதுஆலங்குடி.
-
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
எரிஞ்சு விழக் கூடாது.. குணமா சொல்லனும்! ரேசன் கடை ஊழியர்களுக்குப் பறந்த உத்தரவு! ஸ்பாட்டில் அமைச்சர் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
இப்போ தான் ஆட்சிக்கு வந்துருக்கோம்னு.. சாக்கு போக்கு சொல்ல கூடாது! கரண்ட் மேட்டருக்கு வந்த எடப்பாடி -
தமிழகத்தில் 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் விசாரணை! போலீஸ் டிஜிபி பரபரப்பு தகவல்! -
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் உடல்.. சொந்த ஊரில் தகனம்! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்? -
பேய் மழை வெளுத்து வாங்க போகுது.. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று டமால் டுமீல் தான்! மெட் அப்டேட்!












Click it and Unblock the Notifications