ராஜிவ் பிறந்த தின நிகழ்ச்சி: ஜெ. புறக்கணிப்பு
டெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 60வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசின் சார்பில் நடந்தவிழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்காமல் புறக்கணித்தார்.
இந்த தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.
காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்த பின் வரும், ராஜிவின் பிறந்த தின நிகழ்ச்சி இது.இதையடுத்து நாடு முழுவதும் அக் கட்சியும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. ராஜிவுக்குஅஞ்சலி செலுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் இன்று கூடுகிறது.
இன்று காலை டெல்லியில் உள்ள ராஜிவின் நினைவிடமான வீர பூமியில் துணை ஜனாதிபதிபைரோன் சிங் செகாவத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினர்.
ராஜிவின் மகள் பிரியங்கா, மகன் ராகுல் காந்தி ஆகியோரும், மத்திய அமைச்சர்களும், எராளமானபொது மக்களும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகே ராஜீவ் காந்தியின் உருவச் சிலையை பிரதமர் மன்மோகன் சிங் திறந்துவைத்தார். இந் நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி,சோனியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த தினத்தையொட்டி நினைவிடத்தில் மாபெரும் கல்லினால் செதுக்கப்பட்டுள்ள பெரிய தாமரைமலரும் திறந்து வைக்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லிணக்க உறுதி மொழிஎடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந் நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வரவில்லை.இதையடுத்து அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை ஜெயலலிதா புறக்கணிப்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications