தொண்டர்களை களமிறக்குகிறார் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஒரு பக்கம் மதிமுக பொதுச் செயலாளரின் மறுமலர்ச்சி நடை பயணம், இன்னொரு பக்கம்திமுகவின் சிறப்பு மாநாடு என எதிர்க் கட்சிகள் அனைத்தும் மும்முரமாக இருக்க, அதிமுகதொண்டர்களையும் களத்தில் இறக்கிவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

அதிமுக அரசின் சாதனைகளை விளக்கியும், அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் நடத்தி வரும்பிரச்சாரத்தை முறியடிக்கவும் வரும் 29ம் தேதி முதல் மாநில அளவில் பிரச்சாரங்கள், பேரணிகள்நடத்த அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எதிர்க் கட்சிகள் நமது சாதனைகளை மறைத்து மக்களிடம் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.அதை முறியடித்து நம் அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்க வரும் 29ம் தேதி முதல் மாவட்டத்தலைநகர்கள் தொடங்கி ஒன்றிய, நகர, கிராமப் பஞ்சாயத்துகள் வரை மாநிலத்தின் அனைத்துப்பகுதிகளிலும் அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்.

ஆட்சியில் அமர்ந்தது முதல் நமது அரசு படைத்து வரும் சாதனைகள் ஏராளம், ஏராளம். நமதுஆட்சியில் இந்தியாவிலேயே அனைத்துத் துறைகளிலும் முதல் மாநிலமாக தமிழகம் முன்னேறிவருகிறது. நாட்டுக்கே நாம் வழி காட்டியாய் இருக்கிறோம்.

ஆனால், நம்மை எதிர்ப்பதை மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்ட எதிர்க் கட்சியினர்நமது சாதனைகளை மூடி மறைக்க பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்மை உறங்கும்போது பொய் ஊர்வலம் வரும் (வைகோவின் நடை பயணம்) என்பார்கள்.

சத்தியத்தின் ஒளி விளக்கை ஏற்றி, பொய்களை புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டிய நேரம் இது.சுயநலமே வடிவெடுத்த சூது மதியாளரின் (திமுக தலைவர் கருணாநிதி) சுயரூபத்தை தோலுரித்துக்காட்ட வேண்டிய வேளை இது.

காவிரி விவகாரத்தில் எதிர்க் கட்சிகளின் இரட்டை வேடம், சென்னை குடி நீர் பிரச்சனையைத் தீர்த்துஅந்த நகரமே காலியாகாமல் தடுத்த அதிமுக அரசின் சாதனை, சட்டசபைக்கு வராமல் எதிர்க்கட்சிகள் செய்த ஜனநாயக கேலிக் கூத்து, தமிழக வளர்ச்சியைத் தடுக்கும் மத்திய அமைச்சர்கள்,மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டதாக எதிர்க் கட்சிகள் போடும் போலிக் கூப்பாடு,

கல்வி நிலையங்களில் குண்டு இருப்பதாக புரளி கிளப்பி மக்களிடையே அச்சத்தைப் பரப்பியகும்பலை அடையாளம் காட்டுதல், அரசு ஊழியர் மற்றும் தொழிலாளர்களின் பி.எப். மீதானவட்டியைக் குறைத்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தல், தமிழகத்துக்கு ரூ. 11,000 இழப்பைஇந்த அரசு ஏற்படுத்திவிட்டதாக தணிக்கைத் துறை அதிகாரியும் எதிர்க் கட்சியினரும் செய்த பொய்பிரச்சாரம் ஆகியவற்றை முன்னிருத்தி நமது பிரச்சாரம் இருக்க வேண்டும்.

எத்தனை தீய சக்திகள் ஒன்று கூடி இடர் விளைவித்தாலும் அத்தனையையும் தாண்டி, அவற்றைப்பொடிப் பொடியாக்க மக்களுக்கு நல்லாட்சி வழங்குவது அதிமுக அரசு மட்டுமே என்பதை சுட்டிக்காட்டுங்கள்.

சைக்கிள் பேரணிகள், தெரு முனை பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்கள் மூலம் மக்களுக்கு இதைஎடுத்துச் சொல்லுங்கள். துண்டுப் பிரசுரங்களை வழங்குங்கள்.

வீறு கொண்டு எழுவீர்.. வெற்றிச் சரித்திரம் படைப்பீர்...

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+