நதி நீர் பிரச்சனை: மன்மோகன், சோனியா கவலை
டெல்லி:
நதி நீர் பிரச்சனைகளை மாநிலங்கள் பேச்சு நடத்தி, சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்என பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ராஜிவின் 60வது பிறந்த தினம் மற்றும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராவது குறித்துவிவாதிக்க காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய காரிய கமிட்டி இன்று டெல்லியில் கூடியது.
நாடு முழுவதும் இருந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ள இக் கூட்டத்தில் பேசியசோனியா காந்தி,
நதி நீர் பிரச்சனைகளின்போது நாட்டின் நலனை மனதில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனது நலனை பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு. அதேநேரத்தில் தேச நலனையும் மறந்துவிட முடியாது. பிரச்சனையை பேசி சுமூகமாகத் தீர்ப்பதே சிறந்தது.
நதி நீர்ப் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே வருவது பெரும் கவலை தருகிறது. நீரை அனைத்துத்தரப்பினரும் நேர்மையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நமது புண்ணிய நதிகளின் நீரை வைத்து மக்களைப்பிரிப்பதை அனுமதிக்க முடியாது. நீர் தான் இந்த நாட்டின் மிக முக்கிய பிரச்சனையாக இருக்கப்போகிறது. அதை உரிய முறையில் நிர்வகிக்க வேண்டும் என்றார்.
காவிரி விவகாரம் ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் ஹரியாணா மற்றும் டெல்லியுடன் செய்துகொண்ட நீர் பகிர்வு ஒப்பந்தத்தை பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அமரிந்தர் சிங் ஒருதலைப்பட்சமாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
அவரது செயலை கண்டிக்கும் வகையிலேயே இன்று சோனியா பேசியதாகத் தெரிகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications