ஜெ. சொத்து வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒருவாரத்துக்குள் பெங்களூர் நீதிமன்றத்துக்கு அனுப்புமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.
இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவையும் அவரது தோழி சசிகலாவையும்சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர்அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அப்போது தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட முறையை மிகக் கடுமையாகவிமர்சித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரியவா, சேமா ஆகியோர், இந்த சொத்துக் குவிப்பு வழக்கைமீண்டும் விசாரிக்க உத்தரவிட்டனர்.
மேலும் ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் இந்த வழக்கு நியாயமான முறையில் நடைபெறவாய்ப்பில்லை என்று கூறி, அதை பெங்களூருக்கு மாற்றியும் உத்தரவிட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர். ஆனால், இன்னும்இந்த வழக்கு விசாரனை தொடங்கவேயில்லை. வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசுவழங்காமல் இழுத்தடிப்பதால் தான் விசாரணை தாமதப்படுவதாக அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில்இன்னொரு மனு தாக்கல் செய்தார்.
அதனை இன்று விசாரித்த அதே நீதிபதிகளான வரியவா, சேமா ஆகியோர், ஒரு வாரத்துக்குள்ஜெயலலிதா வழக்குத் தொடர்பான ஆவணஙகள் பெங்களூர் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டாகவேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து ஒரு மூத்த அதிகாரி சென்னைக்குச் சென்று,ஜெயலலிதாவின் வழக்கு ஆவணங்களை சேகரித்துக் கொண்டு வர வேண்டும் என்றும், தமிழக,கர்நாடக அரசுகள் உரிய பாதுகாப்பு தந்து ஆவணங்களை பெங்களூருக்கு பத்திரமாகக் கொண்டு வரவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைக்கும் பணிகளில் முந்தைய காங்கிரஸ் முதல்வர் கிருஷ்ணாஅவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இதனால் நீதிமன்றம் அமைக்கும் பணிகள் மெதுவாகவேநடந்தன. இன்னும் கூட நீதிமன்றத்தை எங்கு அமைப்பது என்று இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
அதே போல வழக்கை விசாரிக்கும் நீதிபதி, அரசுத் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களும்அறிவிக்கப்படவில்லை.
இந் நிலையில் காவிரி, வீரப்பன் விவகாரத்தால் தமிழக-கர்நாடக உறவுகள் சீர்குலைந்துஇருப்பதாகவும் வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதாவின்சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதை நீதிமன்றம் நிராகரித்தது.
இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் தமிழில் இருந்ததால்அவற்றை கன்னடம், ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கும் பணி தொடங்கியது.
ஆனால், ஆவணங்களை தமிழக அரசு பெங்களூருக்கு அனுப்ப மறுத்ததால் அந்தப் பணியும்தடைபட்டுவிட்டது.
இந் நிலையில் தான் வழக்குத் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஒரு வாரத்துக்குள்பெங்களூருக்கு அனுப்பியாக வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications