ஜெ. வெளிநாட்டுப் பயணம்: ஆற்காடு சந்தேகம்
சேலம்:
முதல்வர் ஜெயலலிதா வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைத்துள்ள பண விவரங்களை சரிபார்க்கவே லண்டன் செல்லத் திட்டமிட்டுள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
சேலம் திமுக மாநாட்டில் பேசிய கட்சியின் பொருளாளர் ஆற்காடு வீராசாமி,
உடல் நிலையைக் காரணம் காட்டியும், சிகிச்சைக்காகவும் முதல்வர் ஜெயலலிதா வெளிநாடு செல்லத்திட்டமிட்டிருப்பதாக தகவல் வருகிறது. ஆனால், அவர் வெளிநாடு போவது சிகிச்சைக்காக அல்ல.
ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோது கோடிகோடியாய் கொள்ளையடித்து அமெரிக்கா, இங்கிலாந்து,சிங்கப்பூர் என பல நாடுகளின் வங்கிகளிலும் முடக்கி வைத்துள்ளார் ஜெயலலிதா.
அந்தப் பணத்தை வரவு-செலவு பார்க்கவே வெளிநாடு செல்லத் திட்டமிடுகிறார். இதற்கு சாக்காகத்தான் மருத்துவ சிகிச்சையை சொல்கிறார்கள். மேலும் வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்த வழக்குவிசாரணை விரைவில் கர்நாடக நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது.
அதிலிருந்து தப்பும் வகையில் வெளிநாட்டில் போய் 5,6 மாதம் தங்கிவிட ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளார். அவரது வெளிநாட்டுப் பயண முயற்சியை திமுக மத்திய அமைச்சர்கள் தடுக்கவேண்டும் என்றார்.
முதுகு வலி வலி மற்றும் கால் மூட்டு வலி காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற ஜெயலலலிதாதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக அனுமதி கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர்கடிதம் எழுதவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
லண்டனில் அவரது தங்கல், சிகிச்சைக்கான உதவிகளைச் செய்ய ஹிந்துஜா சகோதரர்கள் முன்வந்துள்ளதாகவும் தெரிகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications