செக்ஸ் தொடர்பு: 30 காக்கிகளின் விவரம் தந்தார்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Jayalakshmiதன்னுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்த 30 காவல்துறை அதிகாரிகளின் பெயர், விவரத்தை இன்றுநீதிமன்றத்தில் போலீஸ் அழகி ஜெயலட்சுமி விலாவாரியாகத் தெரிவித்தார்.

மதுரை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பாலசுப்பிரமணியம், மாசிலாமணி ஆகியோர் முன்ஜெயலட்சுமி ஆஜரானார். அப்போது அவரது சார்பில் ஒரு பிரமாண வாக்குமூலத்தை அவரதுவழக்கறிஞர் அழகர்சாமி தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜெயலட்சுமி ஓடி ஒளிந்து மாயமானதாகவும், அவரை போலீசார் தேடிக் கண்டுபிடித்ததாகவும்கூறுகிறார்கள். அது ஜெயலட்சுமி மாயமான வழக்கு அல்ல. போலீஸ் அதிகாரிகளால் கடத்தி, சிறைவைக்கப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட அபலைப் பெண்ணின் வழக்கு.

ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த மதுரை, திருச்சி, பொள்ளாச்சி, கரூர், திருநெல்வேலி,சமயநல்லூர் போலீசாரின் விவரம் இதோ:

1. திருச்சி எஸ்பி சொக்கலிங்கம்- ஜெயலட்சுமியுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்தார்.

2. திருச்சி ஏ.டி.எஸ்.பி. ராஜசேகர்- ஜெயலட்மியை திருமணம் செய்து கைவிட்டார். செக்ஸ்தொல்லை கொடுத்தார்.

3. மதுரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி- செக்ஸ் வெறிக்காக ஜெயலட்சுமிக்கு தாலி கட்டிகைவிட்டவர்.

4. மதுரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன்- ஜெயலட்சுமியுடன் செக்ஸ் உறவுக்கு துடித்தவர். அதற்காகதிருமணம் செய்யுமாறு வற்புறுத்தியவர்.

5. மதுரை இன்ஸ்பெக்டர் வானமாமலை- ஜெயலட்சுமியுடன் அருவருப்பான வகையில் செக்ஸ்தொடர்பு வைத்திருந்தவர். ரூ. 30,000 பறித்துக் கொண்டு ஒதுங்கியவர்.

6. திருமங்கலம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்- செக்ஸ் தொடர்பு

7. மதுரை புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்புராம்

8. மதுரை இன்ஸ்பெக்டர் மாரிமுத்து

9. பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு- துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஜெயலட்சுமியுடன்செக்ஸ் உறவு கொண்டவர்ய

10. கரூர் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன்

11. பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ்

12. பொள்ளாச்சி சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி

13. நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான்- ஜெயலட்சுமியை மும்பை விபச்சார விடுதியில்விற்க பேரம் பேசியவர்

14. மதுரை திடீர்நகர் காவல் நிலைய ஏட்டு கண்ணன்

15. மதுரை திடீர்நகர் காவல் நிலைய போலீஸ்காரர் கல்யாணி

16. மதுரை திடீர்நகர் காவல் நிலைய போலீஸ்காரர் காசி

17. மதுரை திடீர்நகர் காவல் நிலைய போலீஸ்காரர் சான்பாய்

(இந்த கண்ணன், கல்யாணி, காசி ஆகியோர் இன்ஸ்பெக்டர்களின் உத்தரவுப்படி ஜெயலட்சுமியின்சேலைகளைத் துவைத்தவர்கள். அது தவிர ஜெயலட்சுமிக்கு கார் ஓட்டியவர்கள், காய்கறி வாங்கிவரும் வேலை பார்த்தவர்கள். சான்பாய் ஜெயலட்சுமிக்கு எடுபிடி வேலை பார்த்துள்ளார்)

18. திருநெல்வேலி இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ்- போலீஸ் நிலையத்தில் வைத்தே ஜெயலட்சுமியைகற்பழித்தவர்.

19. சமயநல்லூர் டி.எஸ்.பி. கனகராஜ்- ஜெயலட்சுமியுடன் வியாபார தொடர்பு வைத்திருந்தவர்.

இவர்களைத் தவிர மேலும் வேலூர், திருத்தங்கல் பகுதிகளைச் சேர்ந்த 11 போலீசாரின் பெயர்களும்இதில் உள்ளன. அவர்களும் ஜெயலட்சுமியுடன் பல விதத்திலும் தொடர்பு வைத்திருந்தவர்கள் தான்என்று அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட நீதிபதிகள், ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமியிடம்பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறினர். (அழகிரி சாமி தான் தனது மகளை இன்ஸ்பெக்டர்இளங்கோவன் கடத்திச் சென்றதை நீதிமன்றத்துக்குத் தெரிவித்து வழக்கு வெளியில் வரக்காரணமாக இருந்தவர்).

அவர் கால அவகாசம் கேட்டார். அவருக்கு இலவச சட்ட ஆலோசகரை நியமிக்கவும் நீதிபதிகள்உத்தரவிட்டனர். இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி நடந்தஉண்மைகளைத் தெரிவிக்குமாறு அழகிரிசாமிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து பெண் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஜெயலட்சுமி மீண்டும்சொக்கிகுளத்தில் உள்ள பெண்கள் காப்பகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக மன்மத ராணி ஜெயலட்சுமி இன்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்யப்போகிறார் என்றதும், அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ன பயத்தில் தென் மாவட்ட காக்கிச்சட்டைகள் கலக்கத்தில் ஆழ்ந்து போயிருந்தன.

Jayalakshmiகாவல்துறை அதிகாரிகளை வைத்து பணம் ஈட்டியதாக ஜெயலட்சுமி மீது காக்கிகளும், தன்னைகிட்டத்தட்ட விபச்சாரியாக்கி காவல் துறை அதிகாரிகள் தான் பணம் ஈட்டினர் என ஜெயலட்சுமியும்பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந் நிலையில் வாக்குமூலத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசாருடன் தனக்கிருந்த தொடர்புகளைவெளியிடப் போவதாக ஜெயலட்சுமியின் வழக்கறிஞர்கள் கடந்த வாரம் மிரட்டியிருந்தனர்.

இதையடுத்து ஜெயலட்சுமியை, அவர் தங்க வைக்கப்பட்டுள்ள மதுரை காப்பகத்திலேயே ஆட்களைஅனுப்பி சந்தித்து பல அதிகாரிகளும் சமரச முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் 30போலீஸ் அதிகாரிகளின் பெயர்களை இன்று நீதிமன்றத்தில் சொல்லி அவர்களை நாறடித்துள்ளார்ஜெயலட்சுமி.

இதற்கிடையே, தன்னைக் கொல்லப் போவதாக சில போலீஸ் அதிகாரிகள் மிரட்டுவதாகவும்நிருபர்களிடம் தெரிவித்துள்ளார் ஜெயலட்சுமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+