சினிமா பைனான்ஸ்.. போலீஸ் கந்துவட்டி..

Subscribe to Oneindia Tamil

மதுரையில் மிகப் பிரபலமான கந்து வட்டித் தொழிலில் பல காக்கிச் சட்டைகளின் முதலீடும் இருப்பது அரசல்புரசலாக வெளியில் தெரிந்ததுதான். இந்த கந்து வட்டிக் கும்பல்கள் சினிமாவிலும் முதலீடு செய்துள்ளன.

இவர்களிடம் பணம் வாங்கிய சினிமா அதிபர் ஜி.வெங்கடேஸ்வரனே தற்கொலை செய்யும் அளவுக்கு டார்ச்சர்தந்த கும்பல் இது. இவரைப் போல வெளியில் தெரியாமல் போன அப்பாவி உயிர்கள் ஏராளம், ஏராளம்.

இவர்களிடம் கை நீட்டிவிட்ட ஒரே காரணத்துக்காக மானம் இழந்தவர்களும் ஏராளம், ஏராளம். ஆனால், இந்தக்கும்பல்க கட்டுப்படுத்த வேண்டிய போலீசே அதை திரும்பி நின்று வேடிக்கை பார்த்து வருகிறது. அதற்குக்காரணம், இந்தக் கும்பல்களிடம் புழங்கும் பணத்தில் பெரும் பகுதி போலீஸ் அதிகாரிகளின் லஞ்சப் பணம் என்பதுதான்.

இந்தக் கந்துவட்டிக் கும்பல்களிடம், தங்களது லஞ்சப் பணத்தை ஜெயலட்சுமி மூலம் ரொட்டேசன் செய்துள்ளனர்பல காவல்துறையினர். இந்த விவரங்களை நக்கீரன் இதழில் புட்டுப் புட்டு வைத்துள்ளார் போலீஸ் அழகிஜெயலட்சுமி.

ஜெயலட்சுமியின் பேட்டி விவரம்:

இப்பவும் கூட பல பத்திரிக்கைகள் நானா போலீஸ்காரங்களைத் தேடி போய் கவிழ்த்ததா எழுதறாங்க. அதான்வருத்தமா இருக்கு. என்னோட 98421-95198 செல்போனோட இன்கமிங், அவுட் கோயிங் லிஸ்ட வாங்கிப்பாருங்க. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 20 போலீஸ் அதிகாரிகளாவது என் லைனுக்கு வந்தது தெரியும். அவங்கஎல்லோருமே என்கிட்ட வந்தபோது, இதயத்தை கழட்டி வச்சவங்க தான்.

நான் அடிக்கடி வீடு மாறி, தொழில் நடத்துனதா கதை கட்றாங்க. நிஜம் என்னன்னா.. என்னைத் தங்க வச்சஅத்தனை போலீஸ் அதிகாரிகளுமே என் மூலம் தங்கள் லஞ்சப் பணத்தை பதுக்கி வச்சாங்க. ரெய்டுவந்தா வீட்ல அவுங்க கொட்டி வச்ச லஞ்சப் பணம் மாட்டிக்குனு அடிக்கடி வீட்டை மாத்தி எல்லாதிசையிலும் இழுத்தடிச்சாங்க..

காக்கிச் சட்டை போட்டுக்கிட்டு ஊரைக் கொள்ளை அடிச்ச இவங்க கொடுத்த பணத்தை சினிமாபைனான்சியர்களுக்கும் கந்துவட்டிக் கும்பலுக்கும் கொடுத்தேன். மதுரை நேதாஜி தெருவில்இருக்கும் 10 கந்துவட்டிக்காரர்கள் கிட்டேயும் பணம் கொடுத்தேன்.

மதுரை ஜெயிலுக்குப் பின்னால இருக்கும் கந்துவட்டிப் பொம்பளை ஆயிங்கிறவள்கிட்டயும் பலலட்சங்களை அள்ளிக் கொடுத்திருக்கேன். இந்த காக்கிகள் பணம் மதுரையையும் தாண்டிகோடம்பாக்கம் வரை பாய்ஞ்சிருக்கு. அதுக்கும் என்னைத் தான் மீடியேட்டரா பயன்படுத்தினாங்க.

ஒரு தடவை இன்ஸ்பெக்டர் மலைச்சாமிக்கு சென்னையில நடந்த விழாவுல அவார்ட் கொடுத்தாங்க.அதுக்கு புதுசா வாங்கின எஸ்டீம் கார்ல என்னை மெட்ராஸ் கூட்டிட்டுப் போனார் மலைச்சாமி.அப்போ, எங்களுக்கு சென்னை சாந்தி தியேட்டர் பக்கத்துல லாட்ஜ்ல ரூம் போட்டுத் தந்தது மதுரைதிருமங்கலத்தைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் தான்.

அந்த பைனான்சியர் மூலமா பல சினிமா புள்ளிகளும் எனக்கு பழக்கமானாங்க.

ஒரு நாள் மதுரை எல்லீஸ் நகர் வீட்டுல இன்ஸ்பெக்டர் மலைச்சாமி இருக்கிறது தெரியாமஇன்ஸ்பெக்டர் இளங்கோவனும் வந்துட்டார். வந்தவர் சும்மா இருக்கல, என்கிட்ட சில்மிஷத்தைஆரம்பிச்சார். இதைப் பார்த்த மலைச்சாமி டென்சன் ஆக, ரெண்டு பேரும் என் கண்ணு முன்னாலஅடிச்சு உருண்டாங்க.

நான் பயந்து போய் மூலையில பதுங்கினேன். இப்போ அதை நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது.

இப்போ என் விவகாரம் வெளியுலகுக்கு வந்ததுக்கு இளங்கோவன் தான் காரணம். என்கிட்ட அவர்பதுக்கி வச்ச லஞ்சப் பணம் உடனே வேணும்னு கேட்டு தகராறு பண்ணப்ப தான் விவகாரம்வெளியில வந்துச்சு.

நான் அவர் கொடுத்த பணத்தை பல இடங்கள்ல குடுத்து வச்சிருந்தேன். இளங்கோவன் நெருக்குறதநான் மலைச்சாமிகிட்ட சொன்னேன். அவர் தன்னோட எஸ்டீம் காரை கொடுத்து பணத்தை வசூல்பண்ணிட்டு வரச் சொல்லி அனுப்பி வச்சார்.

என் காருக்கு முன்னால போலீஸ் ஜீப்பையும் காக்கிகளையும் பாதுகாப்புக்காக அனுப்பி வச்சார். என்காருக்கு முன்னாலயும் பின்னாலும் ஜீப் வர, என்னைப் பார்த்தவங்க, இவளுக்கு இப்படி ஒருயோகமான்னு ஆச்சரியப்பட்டாங்க.

ஆனா, உண்மையில நான் போலீஸ்காரங்கிட்ட மாட்டிக்கிட்டு சின்னாபின்னாப்படுத்தப்பட்டதுஎனக்கு மட்டும் தான் தெரியும்.

என் வீட்டுக்கு காய்கறி வாங்கக் கூட கவர்மெண்ட் சம்பளம் வாங்கும் போலீஸ்காரர்கள்தான்போவாங்க. எனக்கு கார் ஓட்டினர் போலீஸ் டிரைவர். இப்படி நான் வாழ்ந்ததைப் பார்த்து ஏகப்பட்டபேர் பெருமூச்சு விட்டிருக்காங்க.

ஆனா, கட்டில்ல நான் காக்கிச் சட்டைகள்கிட்ட சிக்கி, மூச்சு கூட விட முடியாம, பட்ட அவஸ்தைகள்எனக்கு மட்டும் தான் தெரியும்.

என் கூட பழகின போலீஸ் அதிகாரிகள், என் வீட்ல இருந்த அவஙகளோட உடமைகளை எல்லாம்பதுங்கி வந்து இப்போ எடுத்துட்டு ஓடிட்டதா சொல்றாங்க. ஆனாலும் என் கிட்ட சில ஆவணங்கள்இருக்கு. சமயம் வரும்போது அவை வெளியில் வரும்.

இவ்வாறு கூறியுள்ளார் ஜெயலட்சுமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+