ரயிலில் ஹூப்ளி வருகிறார் உமா: வந்ததும் கைது

Subscribe to Oneindia Tamil

போபால்:

மத்தியப் பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உமா பாரதி, கர்நாடக மாநிலம் ஹூப்ளி நீதிமன்றத்தில்நாளை சரணடைவதற்காக இன்று காலை போபாலில் இருந்து ரயிலில் புறப்பட்டார்.

ஆனால், அவர் ஹூப்ளிக்குள் நுழைந்தவுடன் கைது செய்யப்படுவார் என கர்நாடக போலீசார் அறிவித்துள்ளனர்.இதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தானாகவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதிக்க வேண்டும்என அக் கட்சி கோரியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன் ஹூப்ளியில் பிரச்சனைக்குரிய இடத்தில், தடை உத்தரவையும் தாண்டி உமா பாரதிகொடியேற்றியதையடுத்து ஏற்பட்ட மதக் கலவரத்தில் பலர் உயிர் நீத்தனர். இந்தக் கலவரத்தைத் தூண்டியதாக உமாபாரதி மீது போடப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்ய கர்நாடக போலீஸ் படை போபால் சென்றது. ஆனால், தானே ஹூப்ளிநீதிமன்றத்தில் இன்று சரணடையப் போவதாக உமா பாரதி அறிவித்தார். இதையொட்டி ஹூப்ளி நகரில் போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர். நகர் முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே மத்தியப் பிரதேச புதிய முதல்வராக உமா பாரதியின் நெருங்கிய சகாவும் மூத்த பாஜகதலைவருமான உள்துறை அமைச்சர் பாபுலால் கெளர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

சிறையில் அடைக்கப்பட்டால் உமா பாரதி ஜாமீன் கோர மாட்டார் என பா.ஜ.க. தலைமை அறிவித்துள்ளது.

இன்று காலை கோவா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஹூப்ளி புறப்பட்ட உமா பாரதியை புதிய முதல்வர் பாபுலால்கெளரும் வழியனுப்பி. மூத்த அமைச்சர்கள் ரயில் நிலையத்துக்கு வந்து வழியனுப்பி வைத்தனர்.

பா.ஜ.க. தொண்டர்கள் தண்டவாளத்தில் படுத்து ரயிலை மறித்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.உமா பாரதியுடன் ஏராளமான பா.ஜ.கவினரும் ரயிலில் ஹூப்ளி வருகின்றனர். இந்த ரயில் நாளை ஹூப்ளிவந்தடையும்.

ஆனால், ஹூப்ளியில் உமா பாரதி நுழைந்தவுடன் கைது செய்யப்படுவார் என கர்நாடக மாநில டிஜிபி போர்கர்தெரிவித்துள்ளார். போபாலுக்கு அனுப்பப்பட்ட போலீஸ் படையினரே ஹூப்ளியில் வைத்து அவரைக் கைதுசெய்வர் என்றார்.

ரயிலில் நிருபர்களிடம் பேசிய உமா, இது ஒரு காங்கிரஸ் சதி. மதக் கலவரத்துக்கு நான் எப்படி பொறுப்பேற்கமுடியும். ஹூப்ளியில் நடந்த கலவரத்துக்குக் காரணமே கர்நாடக போலீஸ் தான் என்றார்.

இதற்கிடையே ஹூப்ளி செல்லும் வழியில் கோவாவில் உமா பாரதிக்கு பிரமாண்டமான வரவேற்பு வழங்க அம்மாநில பாஜக முடிவு செய்துள்ளது.

உமா பாரதியின் கைதை எதிர்த்து நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப் போவதாகவும்பா.ஜ.க. அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+