லாரி ஸ்டிரைக்: சமாளிக்க 300 சரக்கு ரயில்கள்
சென்னை & டெல்லி:
நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்துவிட்ட லாரி உரிமையாளர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தைஇன்றும் 5வது நாளாகத் தொடர்கின்றனர்.
லாரி சர்வீசுக்கு சேவை வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து நடக்கும் இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுமத்திய நிதியமைச்சகம் எடுத்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
இன்று 5வது நாளாக தொடரும் போராட்டத்தால் நாடு முழுவதும் சரக்குப் போக்குவரத்து மிகக் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அத்தியாவசிப் பொருள்களின் சப்ளை பாதிக்கப்படாமல் தடுக்க நாடு முழுவதும் கூடுதலாக 300சரக்கு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் இப்போது இயங்கும் சரக்குரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஈரோட்டில் மஞ்சள் பெருமளவில் தேங்கிக் கிடக்கிறது. அதே போல கோவை,திருப்பூரில் ஜவுளிகளும் தேக்கமடைந்துள்ளன.
இது குறித்து சென்னை தொழில் வர்த்தக சபையின் தலைவர் முரளி வெங்கட்ராமன் கூறுகையில்,
இந்தப் போராட்டத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வர அரசு முயற்சி எடுக்க வேண்டும். போராட்டம்தொடருமானால் தமிழக தொழில்துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றார்.
இதற்கிடையே லாரிகள் இயங்காததால் நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு பெரும் நஷ்டம்ஏற்பட்டுள்ளதாகவும், லாரிகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வராவிட்டால் நாங்களும் பங்குகளை மூடிபோராட்டத்தில் குதிப்போம் எனவும் பெட்ரால் பங்கு உரிமையாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications