மீண்டும் ராகிங் கொடுமை: 3 பேர் சஸ்பெண்ட்
சென்னை:
சென்னை பொறியியல் கல்லூரியில் ராகிங் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவர் கொடுத்த புகாரின்அடிப்படையில் 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பல உயிர்களை காவு வாங்கிவிட்ட ராகிங்குக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராகிங்கில் ஈடுபடும்மாணவர் கைது செய்யப்படுவார், கல்லூரியின் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ராகிங் கொடுமைகள் நடந்தேறியபடிதான் உள்ளன.
இந் நிவையில் குரோம்பேட்டை அரசு எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் முதலாமாண்டுமாணவரான அசாருதீன் (19), மற்றும் அவருடன் படிக்கும் ஜூனியர் மாணவர்களை, 8 சீனியர் மாணவர்கள்கொடுமையாக ராகிங் செய்துள்ளனர்.
முஸ்லீம் மாணவரான அசாரூதீனை தாடியை எடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும் சர்வர் உடையில்வந்து காபி கொடுக்குமாறு கூறியுள்ளனர்.
இது குறித்து பொறியியல் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தந்தார் அசாருதீன். இந்தத் தகவல் அறிந்த அண்ணாபல்கலைக்கழகத் துணை வேந்தர் பாலகுருசாமி, இது குறித்து விசாரிக்க கமிட்டி அமைத்தார்.
இந்தக் கமிட்டி விசாரணை நடத்தியதோடு, சீனியர் மாணவர்களின் அடையாள அணி வகுப்பும் நடத்தியது. இதன்அடிப்படையில் பி.டெக் 2ம் ஆண்டு ஆட்டோ மொபைல் என்ஜினியரிங் பயிலும் ஆனந்த், மகேஷ்குமார், செந்தில்குமார் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து அசாருதீன் கூறுகையில், என்னை மட்டுமல்ல ஜூனியர் மாணவர்கள் அனைவரையும தகாதவார்த்தைகளைச் சொல்லித் தான் சீனியர்கள் கூப்பிடுவார்கள்.
நான் என மத வழக்கப்படி வைத்திருந்த தாடியை எடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர்கள். அது தவிர ஜூனியர்மாணவர்களின் பெற்றோர் குறித்தும் இழிவாகப் பேசினார்கள்.
அடையாள அணி வகுப்பில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆனந்த் மட்டுமே உண்மையான குற்றவாளி. மற்றஇருவரும் ராகிங் செய்யவில்லை. அவர்கள் தவறாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.
அதே நேரத்தில் ஆனந்துடன் சேர்ந்து ராகிங் கொடுமை செய்த மேலும் 7 பேர் கமிட்டியிடமும் அடையாள அணிவகுப்பிலும் சிக்காமல் தப்பிவிட்டனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகிங் குறித்து நான் புகார் தந்ததால் தினமும் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. ஆனால், இதற்கு நான் பயப்படமாட்டேன் என்றார்.
மேலும் உண்மையிலேயே ராகிங்கில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னைநகர காவல்துறை ஆணையர் நட்ராஜிடமும் அசாருதீன் புகார் கொடுத்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications