சரணடைந்தார் உமா பாரதி: சிறையில் அடைப்பு
ஹூப்ளி:
மதக் கலவர வழக்கில் ஹூப்ளி நீதிமன்றத்தில் சரணடைந்த மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதியை14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பெல்காம் சிறையில் அடைக்கப்படுகிறார்.
இதை எதிர்த்து நாளை கர்நாடகத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் பந்த் நடத்த பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.
இன்று காலை ரயில் மூலம் ஹூப்ளி வந்த உமா பாரதியை வரவேற்க ஆயிரக்கணக்கான பா.ஜ.கவினர் குவிந்தனர்.இதனால் அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதலில் அவர் ஹூப்ளி வந்தவுடன் கைது செய்வோம் என்று அறிவித்திருந்த கர்நாடக போலீசார், அவரைஅலநவர் ரயில் நிலையத்தின் அருகே ரயிலில் வைத்தே கைது செய்ய முயன்றனர்.
ஆனால், தான் மிகவும் களைப்பாக இருப்பதாகவும், ஹூப்ளி நீதிமன்றத்தில் தானாகவே சரணடைவதாகவும் அவர்கூறியதையடுத்து கைது நடவடிக்கையை போலீசார் கைவிட்டனர். மேலும் ஹூப்ளியில் வைத்தும் அவரைக் கைதுசெய்யப் போவதில்லை என அறிவித்துவிட்டனர்.
இதையடுத்து உமா பாரதி தானாகவே நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரிடம் ஜாமீன் கோருகிறீர்களா என நீதிபதிகேட்டார். இல்லை என உமா பாரதி பதிலளித்தார்.
இதையடுத்து அவரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக ரயிலில் வரும் வழியெல்லாம் முக்கிய ரயில் நிலையங்களில் பாஜகவினர் மத்தியில் உமா பாரதிஉரையாற்றினார்.
தனக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சதி செய்வதாகவும், பொது இடத்தில் தேசியக் கொடியைஏற்றுவது தவறு என்றால் அதற்காக எதையும் தியாகம் செய்யத் தயார் என்றும் கூறினார்.
ஹூப்ளியில் 10 ஆண்டுகளுக்கு முன் தடையுத்தரவையும் மீறி ஈத்கா மைதானத்தில் உமா பாரதி கொடிஏற்றியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக் கலவரத்தில் பலர் பலியாயினர்.
இந்த வழக்கில் ஆஜராகுமாறு பல முறை சம்மன் அனுப்பியும் உமா பாரதி ஆஜராகவில்லை. இதையடுத்துஅவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமாசெய்துவிட்டு ரயிலில் ஹூப்ளி வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தார் உமா பாரதி.
அவரை ஹூப்ளி துணைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அங்கு அவருக்கு உரியபாதுகாப்பும், வசதிகளும் இருக்காது என்பதால் பெல்காம் சிறைக்குக் கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications