தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்
சென்னை:
தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. பொள்ளாச்சி ஜெயராமனும்விஜயலட்சுமி பழனிச்சாமியும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல பல அமைச்சர்களின் இலாக்காக்களையும் அவர் மாற்றம் செய்துள்ளார்.
ஜெயராமனுக்கு உணவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. விஜயலட்சுமி பழனிச்சாமிக்கு சமூக நலத்துறையும்ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை உணவுத் துறை நிதியமைச்சர் பொன்னையனின் வசம் இருந்து வந்தது. அதே போல மின்துறைஅமைச்சராக ஜெயக்குமார் இருந்து வந்தார். இப்போது ஜெயக்குமாருக்கு சட்டத்துறை மட்டுமேஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நாளை ஆளுநர் மாளிகையில் நடக்கிறது. ஏதென்ஸ் ஒலிம்பிக் பார்ப்பதற்காககிரீஸ் சென்றிருந்த ஆளுநர் ராம்மோகன் ராவ் ஊர் திரும்பியதையடுத்து இந்த அமைச்சரவை மாற்றத்தை முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விரைவில் ராம்மோகன் ராவின் பதவி பறிக்கப்படும் என்று கூறப்படும் சூழலில் அமைச்சரவை மாற்றத்துக்கு புதியஆளுநரிடம் இருந்து எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என்று தெரியாததால், இந்த மாற்றத்தை அவசரமாகமுதல்வர் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் அடுத்த சில வாரங்களில் ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதால், ராம்மோகன் ராவின்பதவிக் காலத்திலேயே அமைச்சரவை மாற்றத்தை செய்துவிட முடிவு செய்ததாகத் தெரிகிறது.
தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவது இது 16வது முறையாகும்.
புதிய அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெயராமன், முதல்வர் ஜெயலலிதா இரணடாவது முறையாக ஆட்சிஅமைத்தபோது அமைச்சராகப் பதவியேற்று 18 நாட்களில் பதவி இழந்தவராவார்.
இன்னொரு அமைச்சராக பதவியேற்கவுள்ள விஜயலட்சுமி பழனிச்சாமி, பனைமரத்துப்பட்டி சட்டமன்றஉறுப்பினராவார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications