சென்னை: பட்டப் பகலில் நர்ஸ் கற்பழித்து கொலை
சென்னை:
சென்னை அம்பத்தூரில் நர்ஸ் ஒருவர் பட்டப் பகலில் கடத்திச் செல்லப்பட்டு, கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.அவரது உடல் அலங்கோலமான நிலையில் மாயானத்தில் கிடந்தது.
அம்பத்தூர் அய்யப்பன் நகரில் வசித்து வரும் தேவசிங் என்பவரின் மகள் லென்சி (24). பிஎஸ்சி நர்சிங் முடித்தலென்சி, தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.
வழக்கமான தினமும் வீட்டில் இருந்து சைக்கிளில் வந்து அம்பத்தூர் காவல் நிலையம் அருகே உள்ள சைக்கிள்ஸ்டாண்டில் அதை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பஸ்சில் மருத்துவமனைக்குச் செல்வார். மாலையில் வீடு திரும்புவார்.
இரு தினங்களுக்கு முன் 4 மணிக்கு மருத்துவமனையில் இருந்து கிளம்பிய அவர் வீடு திரும்பவில்லை. சைக்கிள்ஸ்டாண்டில் வந்து 4.35 மணிக்கு சைக்கிளையும் எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளார் லென்சி.
ஆனால், வீட்டுக்கு வரவில்லை. இந் நிலையில் நேற்று காலை அம்பத்தூர் அயப்பாக்கம் சாலையில் உள்ளகல்லறையில் லென்சியின் உடல் நிர்வாணமான நிலையில், சின்னாபின்னாவாக்கப்பட்டு கிடந்தது.
அவரது கைகள் சுடிதார் துப்பட்டாவால் பின் பக்கமாகக் கட்டப்பட்டிருந்தன, வாயும் மூக்கும் துணியால்கட்டப்பட்டிருந்தன. உடல் முழுவதும் நகக் கீரல்கள் காணப்பட்டன. காமக் கொடூரர்கள் கடித்தும், பிராண்டியும்லென்சியை துன்புறுத்தி கற்பழித்துவிட்டுக் கொலை செய்துள்ளனர்.
உடல் கிடந்த இடத்துக்கு அருகிலேயே முள் புதரில் லென்சியின் சைக்கிள் கிடந்தது. மேலும் கைப்பை, செருப்புஆகியவையும் சிதறிக் கிடந்தன.
மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களும் கிடந்தன. லென்சியை தினமும் கவனித்து வந்த ஏதோ ஒரு ரெளடிக்கும்பல் அவரை மயானம் அருகே வைத்து மடக்கிப் பிடித்து உள்ளே இழுத்துச் சென்று கற்பழித்து கொடூரமானமுறையில் கொலை செய்துள்ளது.
கொலையான லென்சி கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவராவார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications