கல்வி: அரசு மீது விஜய்காந்த் மறைமுக தாக்கு
சென்னை:
கல்விக் கொள்ளையர்களுக்கு தமிழக அரசு துணை போவதாக நடிகரும், பொறியியல் கல்லூரி நடத்திவருபவருமான விஜய்காந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
விஜயகாந்த் சமீபகாலமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலையையே எடுத்து வருகிறார். ஆனால், தனிக்கட்சி தொடங்கப் போவதாக சொல்லிக் கொண்டிருப்பதால் இவரை ஒதுக்கியே வைத்துள்ளார் ஜெயலலிதா.
நடிகர் சங்கத்தின் விவகாரங்கள் குறித்தும், விழா குறித்தும் பேச முதல்வர் ஜெயலலிதாவிடம் பலமுறைஅப்பாயின்மென்ட் கேட்டும் விஜய்காந்துக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.
இதைடுத்து கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்தாருக்கு நடிகர் சங்கத்தின் சார்பில்திரப்பட்ட நிதியை முதல்வரின் நிவாரண நிதியில் சேர்க்க விரும்புவதாகவும், அதற்காக முதல்வரை சந்திக்கவும்நேரம் கேட்டார் விஜய்காந்த்.
முதலில் நேரம் ஒதுக்கிய ஜெயலலிதா பின்னர் அதை ரத்து செய்துவிட்டார். இதையடுத்து கும்பகோணத்துக்குதானே நேரில் போய் நிதியைத் தந்ததோடு, முதல்வரின் நிவாரண நிதி முறையாக மக்களுக்குப் போய்ச்சேருவதில்லை என்று வாய் விட்டார்.
இதைத் தொடர்ந்து விஜய்காந்த்தின் கல்வி நிறுவனங்களை தமிழக அரசு கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாகவும்,அவ்வப்போது விஜய்காந்துக்கு குடைச்சல் தரப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் தனது ரசிகர் மன்ற இதழான நமது விஜய்காந்தில், தமிழக அரசின் கல்விக் கொள்கையை விமர்சித்துகட்டுரை எழுதியுள்ளார் கேப்டன்.
அதன் விவரம்:
அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுவதைவிட ஏழைக்கு கல்வி அளிப்பது சிறந்த செயல் என்கிறார்கள் பெரியவர்கள்.ஒரு கோவில் கட்டுவதை விட மேலான புண்ணியம் கல்விக் கூடம் திறப்பதால் கிடைக்கும் என்பார்கள்.
94 குழந்தைகளைப் பலி கொண்ட கும்பகோண விஷயத்தை நினைத்தால் நெஞ்சு கொதிக்கிறது. கல்விச் சிறந்ததமிழ்நாடு என்று பாடிய பாரதி இன்று இருந்திருந்தால் கல்விக் கொள்ளையர் நிறைந்த தமிழ்நாடு என்றுபாடியிருப்பார்.
அந்த அளவுக்கு கல்வியின் பெயரில் நடக்கும் மோசடிகள் அதிகரித்துவிட்டன. ஆயிரம் ரூபாய் வாடகையில்வீட்டைப் பிடித்து, ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நாலு வாத்தியார்களைப் போட்டு கல்வி வியாபாரத்தை செவ்வனேநடத்தி வருகிறார்கள்.
இந்தக் கொள்ளையை சில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தங்கள் மாமூல் வாழ்க்கையை ஒட்டுவதற்காககண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. கல்விக் கூடம் எப்படி இருக்க வேண்டும் என்ற சட்டதிட்டங்கள் செல்லாக்காசாகி விட்டன என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications