இராக்: இந்தியர்கள் விடுதலையாக வாய்ப்பு
குவைத்:
தீவிரவாதிகளின் நிபந்தனைப்படி இராக்கில் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள குவைத் நிறுவனமான கல்ப்லிங்க் போக்குவரத்து நிறுவனம் முன் வந்துள்ளது. இதையடுத்து 3 இந்தியர்கள் உள்ளிட்ட 7 பிணைக் கைதிகளும்விரைவில் விடுவிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் லாரிகளை இராக்கில் ஓட்டிச் சென்ற திலக்ராஜ், அந்தர்யாமி, சுக்தேவ் ஆகிய மூன்றுஇந்தியர்களையும் 3 கென்யர்களையும் ஒரு எகிப்திய டிரைவரையும் கடந்த ஜூலை 21ம் தேதி தீவிரவாதிகள்பிடித்துச் சென்றனர்.
அமெரிக்கப் படைகளுக்கு உணவு சப்ளையில் இந்த லாரிகள் ஈடுபட்டிருந்தன.
இதையடுத்து தீவிரவாதிகள் நியமித்த தூதரான துலாய்மி மூலமாக குவைத் நிறுவனம் சமரச பேச்சு நடத்தியது.இந்தியத் தூதரகமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
பலூஜா நகரில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட 250 குடும்பத்தினருக்கு நஷ்டஈடுவழங்க வேண்டும், இராக்கில் தனது லாரிப் போக்குவரத்தை குவைத் நிறுவனம் நிறுத்த வேண்டும் போன்றநிபந்தனைகளை தீவிரவாதிகள் விதித்தனர். மேலும் தங்களுக்கும் பணம் கோரினர்.
இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பணம் தர முன் வந்த குவைத் நிறுவனம், தீவிரவாதிகளின் மற்ற இருகோரிக்கைகளையும் நிராகரித்துவிட்டது. இதனால் பேச்சுவார்த்தையும் நின்றுபோக, பிணைக் கைதிகளின் நிலைஅபாய கட்டத்தை எட்டியது.
இந் நிலையில் இராக்கில் இருந்து அனைத்து லாரிகளையும் குவைத் நிறுவனம் திரும்பப் பெற்றால் 7 பிணைக்கைதிகளையும் விடுதலை செய்வதாக தீவிரவாதிகள் நேற்று மீண்டும் அறிவித்தனர்.
இதையடுத்து அனைத்து லாரிகளையும் திரும்ப அழைத்துக் கொள்வதாகவும், இராக்கில் இந் நிறுவன லாரிகள் இனிஇயங்காது என்றும் குவைத் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications