லாரி உரிமையாளர்களை சந்திக்க ப.சிதம்பரம் மறுப்பு
டெல்லி:
ஒரு வாரமாக நடந்து வரும் லாரிகள் வேலை நிறுத்தத்தையடுத்து அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின்பொதுச் செயலாளர் சக்சேனா, எஸ்மா சட்டத்தின் (அத்தியாவசிப் பொருள்கள் வினியாக சட்டம்) கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் ஹோட்டலில் தங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அதே போல கர்நாடக லாரிஉரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகமப்பாவும் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர லாரி உரிமையாளர்கள் சங்கப்பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன் வந்தாகக் கூறப்பட்டது. அதை நம்பி லாரிஉரிமையாளர்கள் நிதியமைச்சகத்துக்குச் சென்றனர்.
ஆனால், அவர்களை வருவாய்த்துறைச் செயலாளர் வினிதா ராவ் தான் சந்தித்தார். அந்தப் பேச்சும்தோல்வியடைந்தது.
ஏற்கனவே வருவாய்த்துறை, நிதித்துறைச் செயலாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள்தோல்வியடைந்ததால், நிதியமைச்சரே தங்களுடன் பேச வேண்டும் என லாரி உரிமையாளர்கள கோரியிருந்தனர்.
இதை சிதம்பரம் ஏற்கவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் இதில்தலையிட்டார். இதைத் தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் சிதம்பரம் பேச்சு நடத்துவார்என்று கூறப்பட்டது.
இதனால் சிதம்பரத்துடன் பேச்சு நடத்த அவர்கள் சென்றனர். ஆனால், அவர்களை வினிதா ராவ் தான் மீண்டும்சந்தித்தார். அந்தப் பேச்சும் தோல்வியடைந்துவிட்டது.
இதையடுத்து சுர்ஜித்தை சந்தித்துவிட்டு எப்படியாவது சிதம்பரத்துடன் பேச லாரி உரிமையாளர்கள் முயற்சிமேற்கொண்டுள்ளனர்.
சரக்கு லாரிகள் மீது 10 சேவை வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து இந்த வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications