தேக்கு மரக் கடத்தலில் அமைச்சர் ஓ.பியின் தம்பி!!
தேனி:
பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா தேக்கு மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதைத் தடுக்க முயன்றவனத்துறை அதிகாரியும் இரு வனக் காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் டீக் கடை நடத்திக் கொண்டிருந்தபோது, கூடவே ஒத்தாசையாக கடையை கவனித்து வந்தவர் ராஜா.இப்போது அண்ணனுடன் அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
இந் நிலையில் பெரியகுளம் சரக வன அதிகாரி ராஜேந்திரன் மற்றும் 2 வனக் காவலர்கள் சமீபத்தில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி இவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் தாங்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட அமைச்சர் பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜாதான் என்று ராஜேந்திரன் பகிரங்க குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ராஜேந்திரன் கூறுகையில், அமைச்சர் பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா தேக்கு மரக் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்.மஞ்சளாறு அணைப் பகுதியில் நன்கு வளர்ந்த 4 தேக்கு மரங்கள் கடத்தப்பட்டதன் பின்னணியில் ராஜாதான் உள்ளார்.
இதை நான் கண்டுபிடித்த காரணத்தால்தான் என்னைப் பணியிலிருந்து நீக்கியுள்ளனர். மேலும், ராஜாவுக்கு உதவியாக வனக் காவலர்கள்செல்வநாயகம், முனியப்பன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இதை நான்தான் கண்டுபிடித்து மாவட்ட வன அதிகாரிக்குத் தகவல்கொடுத்தேன்.
ஆனால் அவர்களை மட்டும் பதவி நீக்கம் செய்யாமல் என்னையும் சேர்த்து வேண்டும் என்றே பணி நீக்கம் செய்துள்ளனர். இதற்குராஜாதான் காரணம். எனது பதவி நீக்கத்தை வாபஸ் பெறாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவேன் என்றார் ராஜேந்திரன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications