கடவுள்கள் தான் உதவ வேண்டும்: ராமகோபாலன்
திருச்சி:
கட்டாய மத மாற்றத்தைத் தடுத்து நிறுத்த உதவுமாறு கோவில் கோவிலாக சென்று கடவுள்களிடம் கோரிக்கை வைக்கும் போராட்டம் நடத்திவருகிறார் இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் தமிழக அரசு கட்டாய மத மாற்ற தடைச் சட்டத்தை வாபஸ் பெற்றது. இதைக் கண்டித்து ராமகோபாலன் போராட்டங்கள் நடத்தி வருகிறார். அரசே கட்டாய மத மாற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறி விட்டதால்,கடவுள்களிடம் சென்று உதவி கேட்கும் போராட்டத்தை அவர் நடத்தி வருகிறார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் மொத்தம் 1,600 கோவில்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார் ராம கோபாலன். ஒவ்வொரு கோவிலாகசென்று அங்குள்ள கடவுள்களிடம், மத மாற்றத்தை நீங்கள்தான் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதோடு பக்தர்களிடமும்இது குறித்து விளக்கம் தருகிறார்.
திருச்சியில் உள்ள சாலை விநாயகர் கோவிலுக்கு வந்த ராம கோபாலன், பக்தர்கள் குழுமி நிற்க, உரத்த குரலில் கோரிக்கை வைத்தார். மற்றமதத்தினருக்கு வெளி நாட்டிலிருந்து உதவி கிடைக்கிறது. இந்துக்களுக்கு நீதான் துணை. எனவே கட்டாய மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தநீதான் உதவ வேண்டும் என்று உரக்கச் சொல்லி பிரார்த்தனை செய்தார் ராம கோபாலன்.
பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடம், மத மாற்றத்துக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்றும், தனது பெட்ரோல் செலவுக்குஉதவுமாறும் கோரினார். இதையடுத்து சில பக்தர்கள் அவருக்கு நிதியளித்தனர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications