கடனுக்காக பள்ளி ஏலம்: மாணவர்கள் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் தனியார் பள்ளியை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து அதில் பயிலும் மாணவர்களும், அவர்களதுபெற்றோர்களும் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ராஜலட்சுமி மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப் பள்ளியில் சுமார் 1,000மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இதன் நிர்வாகிகள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்ததால் பள்ளியை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையறிந்தமாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்று காலை சுமார் 1,000 மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பள்ளிக்கு எதிரே கோவை-திருச்சி நெடுஞ்சாலையில் மறியல்போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸாரும், வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளும் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சு நடத்தினர்.ஆனால், பள்ளி ஏலம் விடப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டால்தான் போராட்டத்தைக் கைவிட முடியும் என்று பெற்றோர்கள்திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.

இதனால் அப் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+