எஸ்.டி.டி. கட்டணம் அதிரடி குறைப்பு
டெல்லி:
சாதாரண தொலைபேசிக்கான எஸ்.டி.டி., கட்டணத்தை 33 சதவீதமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் குறைந்துள்ளது.அதேபோல் செல்போன்களுக்கான ப்ரி பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு திட்டத்திற்கான கட்டணத்தை 60 சதவீதம்குறைத்துள்ளது.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எஸ். நிறுவனத்தின் தலைவர் சின்கா பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:
செல்போன்களுக்கான ப்ரி பெய்டு திட்டத்தில்,
செல்-டூ-செல் பேச நிமிடத்திற்கு ரூ.2.20 ஆக வசூலிக்கப்படும் கட்டணம் இனி 90 பைசாவாக குறைக்கப்படுகிறது.செல்-டூ-செல் எஸ்.டி.டி. கட்டணம் ரூ.2.40 லிருந்து ரூ.2 ஆக குறைக்கப்படுகிறது. செல்போனில் இருந்து சாதாரணதொலைபேசிக்கு உள்ளூர் அழைப்பில் பேச வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் 2.40 லிருந்து ரூ.1.20 ஆககுறைக்கப்படுகிறது.
செல்போனில் இருந்து சாதாரண தொலைபேசிக்கு எஸ்.டி.டி. பேசுவதற்கான கட்டணம் தற்போது, 500 கி.மீ.வரையிலான தொலைவுக்கு நிமிடத்திற்கு ரூ.2.40ம், 500 கி.மீ.க்கு மேலான தூரத்திற்கு நிமிடத்திற்கு ரூ.3.60ம்வசூலிக்கப்படுகிறது. இனி இவை இரண்டிற்கும் ஒரே கட்டணமாக நிமிடத்திற்கு ரூ.2.40 மட்டுமே வசூலிக்கப்படும்.
போஸ்ட் பெய்டு திட்டத்தில்,
செல்-டூ-செல் பேச நிமிடத்திற்கு ரூ.1.40 ஆக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் இனி 80 பைசாவாககுறைக்கப்படுகிறது.
ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்தில் உள்ள சாதாரண தொலைபேசிக்கு செல்போன் மூலம்பேசுவதற்கான எஸ்.டி.டி. கட்டணம் 200 கிலோ மீட்டர் வரை நிமிடத்திற்கு ரூ.1.80ம், 200 கிலோ மீட்டருக்கு மேல்பேசுவதற்கான கட்டணம் ரூ.2.40ம் வசூலிக்கப்படும்.
அதேபோல் சாதாரண தொலைபேசிக்கான எஸ்.டி.டி. கட்டணம் 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஒரேமாநிலத்திற்குள் 100 கி. மீட்டருக்கு மேல் பேச வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.1.80லிருந்து நிமிடத்திற்கு ரூ.1.20 ஆககுறைக்கபடுகிறது. 200 கிலோ மீட்டருக்கு மேலான தொலைபேசி அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.3.60லிருந்துரூ.2.40 ஆக குறைக்கப்படுகிறது. இந்த கட்டணக் குறைப்பு அடுத்த மாதம் 10ம் தேதியில் இருந்து அமலுக்குவருகிறது என்றார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications