Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராம்மோகன் ராவை காப்பற்ற அதிமுக வழக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழக கவர்னர் ராம்மோகன் ராவ் எந்த நேரமும் வீட்டுக்கு அனுப்பப்படலாம் என்ற சூழலில், மாநில அரசுகளைகலந்து ஆலோசிக்காமல் கவர்னர்களை நீக்கவோ, மாற்றவோ கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில்அதிமுகவின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு எதிராக தாங்கள் கொடுத்த மனுக்களை ராம்மோகன் ராவ் டஸ்ட் பின்னில் எறிந்துவிட்டதாகபொருமிக் கொண்டிருக்கிறது திமுக. இதையடுத்து அவரை மாற்றும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகரமாக நியமிக்கப்பட்டுள்ள நாராயணனிடம் தனக்குள்ளசெல்வாக்கைப் பயன்படுத்தி பதவியைப் பாதுகாத்துக் கொள்ளும் வேலைகளில் ராம்மோகன் ராவ்இறங்கியுள்ளார்.

ஆனால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ராம்மோகன் ராவ் பயங்கர ஜால்ரா போடுவதாக காங்கிரஸார் மத்தியிலும்கோபம் பரவியுள்ளதாலும் திமுகவின் நெருக்கடி அதிகரித்ததாலும், முன்னாள் சிபிஐ இயக்குனர் சர்மாவைகவர்னராக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந் நிலையில் தான் கவர்னர்கள் மாற்றம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில்தங்களையும் சேர்த்துக் கொள்ளக் கோரி அதிமுகவின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் உத்தரப் பிரதேசம், குஜராத், ஹரியாணா, கோவா மாநில ஆளுநர்களாகஇருந்த ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்குதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி லகோதி தலைமையிலான டிவிசன் பெஞ்ச், இதற்கு பதிலளிக்குமாறுமத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு அதிமுக ராஜ்யசபா எம்பிக்களான நாராயணன், ஜோதி(முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்), மலைச்சாமி, தினகரன், கோகுல இந்திரா, எஸ்.எஸ்.சந்திரன், சையத்கான், காமராஜ், பெருமாள், தங்கத் தமிழ்ச்செல்வன், அன்பழகன், கோவிந்தராஜ் ஆகியோர் மனு தாக்கல்செய்துள்ளனர்.

அந்த மனுவில் 12 அதிமுக எம்.பிக்களும் கூறியிருப்பதாவது:

கவர்னர்களை மாற்றும் விஷயத்தில் எங்களது கருத்தையும் கேட்க உச்ச நீதிமன்றம் முன் வர வேண்டும்.

மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் எங்களது கட்சியும் ஆட்சியில் உள்ளன. மத்தியில் கூட்டணி ஆட்சியில் திமுகஅங்கம் வகிக்கிறது. இதனால் இந்த விவகாரத்தில் எங்களது கருத்தைக் கூறுவது அவசியமாகிறது.

ஒரு மாநில அரசு சுமூகமாக செயல்பட வேண்டும் என்றால் அதற்கு கவர்னரின் ஒத்துழைப்பு மிக அவசியம்.கவர்னர் பதவி நியமனப் பதவி என்றாலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் போன்ற மரியாதைக்குரிய பதவி. கவர்னர்என்பவர் மத்திய அரசு ஊழியர் அல்ல.

அவருக்கு அரசியலமைப்புச் சட்டரீதியாக மரியாதையையும் பாதுகாப்பையும் தர வேண்டிய அவசியம் உள்ளது.தண்டனை அளிக்கும் வகையில் கவர்னர் மாற்றம் கூடாது. ஒரு கவர்னர் தவறாக செயல்பட்டார் என்று நீதிபதிகள்கொண்ட குழு நிரூபித்தால் மட்டுமே அவர் நீக்கப்பட வேண்டும்.

இத்தகைய சட்டம் கொண்டு வரப்படும் வரை கவர்னரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மத்திய அரசுநிர்பந்திக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் நிர்பந்தங்களுக்குப் பணியாத கவர்னர்கள் பலிகடாஆக்கப்பட்டு வருகின்றனர்.

கூட்டணிக் கட்சியினரை திருப்திப்படுத்துவதற்காக கவர்னர்கள் நீக்கப்படுகிறார்கள். தமிழக கவர்னராக இருந்தபீஷ்மநாராயண ராவை நீக்கிவிட்டு, அதிமுக அரசைக் கலைக்க வேண்டும் என்பதற்காகவே சென்னா ரெட்டிகவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டார்.

அதே போல கவர்னராக பாத்திமா பீவி இருந்தபோது திமுக தலைவர் கருணாநிதி ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பாத்திமா பீவியிடம் மத்தியஅரசு அறிக்கை கேட்டது. அதைத் தர அவர் மறுத்ததால் மறு நாளே அவரை நீக்கிவிட்டனர்.

இதனால் இந்த கவனர்கள் மாற்றம் தொடர்பான வழக்கில் எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றுஅதிமுக எம்.பிக்கள் தங்களது மனுவில் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+