ஜெயலட்சுமி: இன்ஸ்பெக்டர் திடீர் தலைமறைவு
மதுரை:
ஜெயலட்சுமி வழக்கில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், அவரது உறவினர்கள் ரவிசங்கர், சண்முகம் ஆகியமூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிவகாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து இளங்கோவன் உள்பட 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
ஜெயலட்சுமியோடு குஜால் குடித்தனம் நடத்தி, பின்னர் பண விஷயத்தில் ஜெயலட்சுமியையும் அவரது அம்மா,அண்ணனையும் கடத்தி, சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் தான் மதுரை திடீர் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்இளங்கோவன். இப்போது தலைமறைவாகிவிட்ட அவரையும் உறவினர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஜெயலட்சுமியுடனான தொடர்பு காரணமாக இதுவரை சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், தலைமைக் காவலர்கண்ணன், போலீஸ்காரர் முருகவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 பேரின் பெயர்களைச் சொல்லியும்3 பேரை மட்டும் கைது செய்துவிட்டு மற்றவர்களை தமிழக அரசு ஏன் விட்டுவிட்டது என்று ஜெயலட்சுமியின்வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் மிக முக்கியமானவரான இன்ஸ்பெக்டர் இளங்கோவனைக் கைது செய்யபோலீசார் முடிவு செய்தனர். இதை அறிந்த இளங்கோவன் தலைமறைவாகியுள்ளார்.
இதயடுத்து அவரது வீட்டை போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
ஜெயலட்சுமியோடு, அண்ணன், அம்மாவையும் இளங்கோவன் அண்ட் கோஷ்டி கடத்திச் சென்று அடித்துஉதைக்க, ஜெயலட்சுமியின் அப்பா நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்குப் போட்டார். இதையடுத்துஜெயலட்சுமி என்ற ஒரு பெண் இருப்பதும், அவர் தனது முந்தானையின் தென் மாவட்ட காவல்துறையைக் கட்டிப்போட்டு ராஜாங்கம் நடத்தியதும் வெளியில் தெரியவந்தது.
இதனால் வழக்கில் முக்கியமான ஆசாமி இந்த இளங்கோவன் ஆவார். தனது லஞ்சப் பணத்தை பத்திரமாக முடக்கிவைக்க ஜெயலட்சுமியை தயவை நாடிய இவர், பின்னர் பணப் பிரச்சனை காரணமாகவே அவரைக் கடத்தினார்.
மேலும் ஜெயலட்சுமியின் மதுரை எல்லீஸ் நகர் வீட்டின் ஒரு சாவியே இவர் வசம் தான் இருந்துள்ளது.அந்தச் சாவியை வைத்து வீட்டைத் திறந்து வழக்கில் தொடர்புள்ள பல முக்கியமானஆவணங்களையும், வீட்டில் கிடந்த தனது பொருட்களையும் ஜட்டி, பனியன்களையும் எடுத்துக்கொண்டு போயிருக்கிறார் இளங்கோவன்.
ஜெயலட்சுமியைக் கடத்திச் சென்ற இளங்கோவன், தனது உறவினர்கள் ரவிசங்கர், சண்முகம் ஆகியோருடன்சேர்ந்து அவரை பாலியல்ரீதியில் துன்புறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.
ஜெயலட்சுமி கூறுவது பொய்: கண்ணன்
இதற்கிடையே இந்த விவகாரத்தில் கைதான ஏட்டு கண்ணன் கூறியதாவது:
காவல்துறையினர் குறித்து ஜெயலட்சுமி கூறியுள்ளது அத்தனையும் பொய். காவல் துறையைப் பயன்படுத்திஅவள்தான் நிறைய சம்பாதித்தாள். நிறைய போலீசாரால் அந்த உண்மைகளைக் கூற முடியவில்லை.
ஜெயலட்சுமி சம்பாதித்த பணத்தை அவள் அப்பா பல இடங்களில் டெபாசிட் செய்திருக்கிறார். ஈரோட்டில்அவளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் வீடு இருக்கிறது. பினாமி பெயரில் இரண்டு மில்களை லீசுக்கு எடுத்துநடத்துகிறார்கள். கழிவுப்பஞ்சு வியாபாரம் செய்யும் அழகிரிசாமிக்கு (ஜெயலட்சுமியின் அப்பா) ஏது இவ்வளவுபணம்? ஏழைக் குடும்பம் போல் நடிக்கிறார்கள்.
அவளை விபசாரத்தில் ஈடுபடுத்திச் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் கண்ணியமிக்க காவல்துறையில் வேலை பார்ப்பவன். அவள் சொல்வது அபாண்டமான பொய்.
விபசாரத்தில் ஈடுபடச் சொன்னேன் என்கிறாளே... அவளுக்கு அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்ததுஎன்பதை முதலில் சொல்லட்டும். பல வருடங்களாக நிறைய பேர் தன்னைக் கெடுத்ததாகச் சொல்லும் ஜெயலட்சுமி,ஏன் அதை அப்போதே வெளியில் சொல்லவில்லை?
இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, -இளங்கோவன் இருவரையும் அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவேஇருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டதாக சொல்கிறாள். இதில் உண்மை இல்லை. மலைச்சாமியிடம்ஜெயலட்சுமியின் உண்மை சொரூபத்தை நான் தான் சொன்னேன். உடனே அவர் அவளுடனான தொடர்பைவிட்டு விட்டார்.
அவளிடம் பணத்தையும் இழந்திருப்பது காவல் துறையினர் மட்டுமல்ல. அந்த லிஸ்டில் பைனான்சியர்கள், ஆலைஅதிபர்கள், அரசியல்வாதிகள் என நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் துணிச்சலாக முன்வந்துஉண்மையைக்கூறினால் ஜெயலட்சுமியின் முழு யோக்கிதையும் தெரியும் என்றார்.
இளங்கோவனால் ஜெயலட்சுமியின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட கண்ணன், வலுக்கட்டாயமாக தன்னுடன்பலமுறை உடலுறவு கொண்டார் என்றும் வேறு போலீஸ்காரர்களுடனும் செக்ஸ் தொடர்பு வைக்க நிர்ப்பந்தித்தார்என்றும் ஜெயலட்சுமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications