புதிய தலைமை செயலகம்: தமிழக அரசுக்கு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்க தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முதல்வர்ஜெயலலிதா பூமி பூஜை நடத்தினார். இதையடுத்து மத்திய சுற்றுச்சூழல்துறையின்அனுமதியில்லாமல் ரூ. 50 கோடிக்கும் அதிகமான செலவில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனமத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்தநீதிபதி பாலசுப்பிரமணியன், மத்திய அரசு விதித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.இதையடுத்து தலைமைச் செலகம் கட்ட டெண்டர்களைக் கோரியது தமிழக அரசு.

இந் நிலையில் தனது உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து மத்தியசுற்றுச்சூழல்துறை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கற்பக விநாயகம் ஆகியோர், மத்தியஅரசின் உத்தரவுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்குவதாக அறிவித்தனர்.

அதே நேரத்தில் டெண்டர் நடைமுறைகளை தமிழக அரசு தொடரலாம். ஆனால், கட்டுமானப்பணிக்கான எந்த உத்தரவையும் தமிழக அரசு பிறப்பிக்கக் கூடாது. இதன அடுத்த கட்ட விசாரணைசெப்டம்பர் 27ம் தேதி நடக்கும் என்று அறிவித்தனர்.

இதனால் டெண்டர்களை இறுதி செய்தாலும் தலைமைச் செயலக கட்டுமானப் பணியைத் தொடங்கமுடியாத நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+