அ.பி. பாஜக முதல்வர், அமைச்சர்கள் காங்.க்கு தாவல்
டெல்லி:
அருணாசலப் பிரதேச முதல்வர் கெகாங் அபாங் மற்றும் அவரது அமைச்சர்கள்அனைவரும் பாஜகவிலிருந்து விலகிகாங்கிரசில் சேர்ந்துள்ளனர்.
நாட்டிலேயே ஜோதிபாசுக்கு அடுத்தபடியாக அதிக ஆண்டுகள் (20 ஆண்டுகள்) முதல்வராக இருப்பவர் என்றபெருமையைப் பெற்றுள்ளார் அபாங்.
1996ம் ஆண்டு வரை காங்கிரசில் இருந்த அபாங், அப்போது நரசிம்ம ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக காங்கிரசில் இருந்து விலகி, அருணாசல விகாஸ் காங்கிரஸ் எனும் கட்சியைத் தொடங்கினார்.
அக் கட்சியை முகுத் மிதி தலைமையிலான அணி உடைத்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. சில மாதங்களுக்குப்பின் முகுத் அணி மீண்டும் காங்கிரசில் சேர்ந்து, அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலிலும் பெரும்பான்மை பலத்தோடுவெற்றி பெற்றது.
அந்த தேர்தலில் அருணாசல விகாஸ் காங்கிரஸ் சார்பில் அபாங் மட்டுமே வெற்றி பெற்றார். 2003-ல்காங்கிரசிலிருந்து எம்எல்ஏகள் விலகி, பாஜகவில் சேர்ந்தனர். அபாங்கும் பாஜகவில் சேர்ந்து மீண்டும்முதல்வரானார். அதுவரை அருணாசல பிரதேசத்தில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மீண்டும் காங்கிரசில் சேர்ந்துள்ளார் அபாங். தான் கட்சி மாறியது குறித்து அபாங் கூறுகையில், பாஜகதனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் மாநிலத்தில் சமீபத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது, அது குறித்துபிரதமரும் உள்துறை அமைச்சரும் மிகுந்த அக்கறையுடன்
விசாரித்தனர் என்றார்.
அப்போது அருகில் இருந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கிரிஜா வியாஸ், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீதும் காங்கிரஸ் மீதும் அபாங்குக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவர் காங்கிரசில் தொடர்ந்து நீடிப்பார்என்றார்.
வரும் அக்டோபரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அபாங் கட்சி தாவியிருப்பது, பாஜகவுக்குப் பெருத்தஅடியாகக் கருதப்படுகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications