உமா பாரதி: வழக்கை வாபஸ் பெறுகிறது கர்நாடகம்
பெங்களூர்:
உமா பாரதி மீதான எல்லா வழக்குகளையும் கைவிடத் தயாராக இருப்பதாக பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன் ஈத்கா மைதானத்தில் தேசியக் கொடியேற்றியது, அதைத் தொடர்ந்து நடந்தமதக் கலவரம், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானது தொடர்பாக உமா பாரதி உள்ளிட்டபலர் மீது மாநில அரசு வழக்குப் பதிவு செய்தது.
இந் நிலையில் கடந்த 2002ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் முதல்வர் கிருஷ்ணாதலைமையிலான கர்நாடக அரசு, உமா பாரதி மீதான வழக்கை வாபஸ் பெறுவது எனமுடிவெடுத்தது.
ஆனால், திட்டமிட்டபடி வழக்கு வாபஸ் பெறப்படவில்லை. இதனால் தான் நிலுவையில் இருந்தஇந்த வழக்கில் உமா பாரதியைக் கைது செய்ய ஹூப்ளி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.
இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த உமா நீதிமன்றத்க் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் உமா பாரதி மீதான வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கர்நாடகஉயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உமா பாரதி மீதான வழக்குகளை வாபஸ் பெறத்தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவது குறித்த அரசின்மனுவை பரிசீலிக்குமாறு ஹூப்ளி நீதிமன்றதுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே உமா பாரதியின் மீது காங்கிரஸ் அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டிருப்பதாகக்கூறி வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பெங்களூரில் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி சத்யாகிரகப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications