காலியாகக் கிடக்கும் 20,000 என்ஜீனியரிங் சீட்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 20,000 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் எனகணிக்கப்பட்டுள்ளது.

தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான சிங்கிள் விண்டோ முறையிலான கலந்தாய்வுநேர்காணல் முடிவடைந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். இதன் பின்னரும் மொத்தம் 20,000இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 240 பொறியியல் கல்லூரிகளில் அரசு சார்பில் நிரப்பட வேண்டிய இடங்களில் 12,500 இடங்கள்காலியாக உள்ளன. மேலும், 35,000 சீட்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பபட வேண்டியவை.

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு உயர்நீதிமன்றம் இன்னும் அனுமதி அளிக்காததால், அந்தஇடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. இதிலும் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னரும் சுமார் 15,000இடங்கள் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் இந்த ஆண்டு குறைந்தபட்சம் 20,000 இடங்கள் காலியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவில்தான் அதிகபட்ச மாணவர் இடங்கள் காலியாக உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.

கட்டணங்கள் மிக அதிகமாகிவிட்டதால், ஆண்டுதோறும் காலியாகக் கிடக்கும் பொறியியல் கல்லூரி இடங்களின்எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+