கவர்னரை காப்பாற்ற ஜெ. தீவிரம்: கலாமிடம் அதிமுக மனு
டெல்லி:
ஆளுநர்கள் மாற்றம், நீக்கம் தொடர்பாக அரசியல் சட்டத்தின் 143வது பிரிவின்படி உச்ச நீதிமன்றஆலோசனையைப் பெற்றே மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று கோரி ஜனாதிபதி அப்துல் கலாமிடம்அதிமுக மனு கொடுத்துள்ளது.
அதிமுக ராஜ்யசபா எம்.பிக்கள் 12 பேரும் பி.ஜி. நாராயணன் தலைமையில் அப்துல் கலாமை சந்தித்து மனுகொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் இப்போதைய ஆளுநர் ராம்மோகன் ராவ் நீக்கப்பட்டு, புதிய ஆளுநராக சிபிஐயின்முன்னாள் இயக்குனர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.
இதனால் ஆளுநர் பதவிக்கு அவமரியாதை ஏற்படுத்தப்படுகிறது. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தற்போதைய ஆளுநரை மாற்றும் எந்த முயற்சியையும் நீங்கள்தடுக்க வேண்டும். புதிதாக யாரையும் நியமிக்கக் கூடாது.
அரசியல் சட்டத்தின் 143வது பிரிவின்படி தன்னிச்சையாகவோ, அல்லது பரிந்துரைஅடிப்படையிலோ உச்ச நீதிமன்றத்தின் ஆலோனையை குடியரசுத் தலைவர் கோரலாம்.
ஆளுநர் என்பவர் மத்திய அரசின் ஊழியராக இருக்க வேண்டிய அவசியமில்லை. தள்ளாடிக்கொண்டிருக்கும் மன்மோகன் சிங்கின் அரசு, ஆளுநர் பதவியை குறைத்து மதிப்பிடுவதைஅனுமதிக்கக் கூடாது.
இந்தப் பிரச்சனை தொடர்பாக அதிமுக எம்பிக்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர். மத்தியில் கூட்டணி அரசில் உள்ள திமுக தனது அதிகாரத்தை முறைகேடாகப்பயன்படுத்தி தமிழகத்தில் சுமூகமான ஆட்சி நடைபெற இடையூறு ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, அதிமுக அரசுக்கு எதிராக அறிக்கை அளிக்கமறுத்ததால் தான் தயவு தாட்சண்யமின்றி நீக்கப்பட்டார். அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து மத்தியஉள்துறை அமைச்சகத்திடம் ஜனாதிபதி அறிக்கையை கோர வேண்டும்.
இந்தச் சூழலில் அரசியல் சட்ட்தின் 156வது பிரிவில் கூறப்பட்டுள்ளபடி ஒரு ஆளுநர், குடியரசுத்தலைவர் விரும்பும்வரை அப் பதவியில் நீடிக்கலாம் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின்ஆலோசனையை கோரிப் பெறுவது அவசியமாகிறது.
மேலும் அச் சட்டப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரம் முழுமையானதா அல்லதுகட்டுப்பாடுகள் உண்டா என்பது குறித்தும் விளக்கம் கோர வேண்டும்.
ஆளுநர் நியமனம், மாற்றம் மற்றும் பதவி நீக்கம் தொடர்பாக சட்டம் இயற்றப்பட வேண்டுமாஎன்பது குறித்து கருத்துக் கேட்க வேண்டும்.
இவ்வாறு அதிமுக எம்.பிக்கள் வழங்கிய மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications