காலில் விழும் கலாச்சாரத்தை ஒழிப்போம்: வைகோ
நாகப்பட்டினம்:
காலில் விழும் கலாச்சாரத்தில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறினார்.
மறுமலர்ச்சி நடை பயணம் மேற்கொண்டுள்ள வைகோ நாகப்பட்டினம் அருகே கருவிழந்த நாதபுரத்தில் நடந்தபொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
தமிழகத்தில் நான் நடத்தி வரும் இந்த நடை பயணத்துக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பு மகத்தானதாக உள்ளது.மக்களின் பார்வை மதிமுக பக்கம் திரும்பியிருப்பதை உணர முடிகிறது. நடை பயணம் மேற்கொண்ட இடங்களில்எல்லாம் மக்களின் அன்பு மழையில் நனைந்து வருகிறேன்.
நான் பட்டம் தருவேன் பதவி தருவேன் என்று யாரிடமும் சொன்னதில்லை. என்னுடன் வந்தால் உழைப்பும்,தியாகமும், கொடுமைகளும், துன்பங்களும் தான் மிஞ்சும் என்று சொன்னேன். அதையும் மீறி என்னுடன் வந்ததலைவர்களும் தொண்டர்களும் கட்டிக் காக்கும் இயக்கம் தான் மதிமுக.
என்னுடன் நடந்து வரும் ஆயிரக்கணக்கான தொண்டரணியினரை நான் கைவிட மாட்டேன். அந்ததொண்டர்களையும் அவர்களது குடும்பத்தையும் மதிமுக மதிக்கும், கட்டிக் காக்கும். என்னுடன் நடக்கஆரம்பித்ததில் இருந்து சிகரெட், மது உள்ளிட்ட பழக்கங்களைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்.
ஆயிரக்கணக்கில் வருகிறார்கள்.. ஆனாலும் ஒரு ஆபாச கோஷமுண்டா? சில்மிஷ செயல்கள் உண்டா?போக்குவரத்தை இடையூறு செய்கிறார்களா? இல்லை. கட்டுப்பாடான படை வீரர்கள் மாதிரி அணி வகுத்துவருகிறார்கள் இந்த இளைஞர்கள்.
மத வெறியும் சாதி வெறியும் வன்முறைக் கலாச்சாரமும் நம் சமூகத்தை பின்னுக்கு இழுத்துச் செல்வதைத் தடுக்கவேஇந்த நடை பயணம். நான் வரும் வழியெல்லாம் சாதிக்காக ரத்தம் சிந்திய பல குடும்பங்களைச் சந்தித்தேன்.இனியும் சாதிக்காக ஆயுதம் தூக்காதீர்கள் என்று அவர்களுக்கு சொல்லிவிட்டு வந்தேன்.
நம் அரசியலில் ஒரு பீடையாகத் திகழ்கிறது காலில் விழும் கலாச்சாரம். அதை ஒழித்துக் கட்டுங்கள். தாய் தந்தையர்தவிர எவர் காலிலும் விழாதீர்கள் இளைஞர்களே. மதுப் பழக்கத்தில் சிக்கிவிடாமல் கவனமாய் இருந்து உங்கள்வாழ்க்கையை அமையுங்கள்.
அதே போல கட்சித் தலைவர்களுக்கு சால்வைகள் அணிவிக்கிறோம் என்று சொல்லி காசை வீணாக்காதீர்கள்.
வேலூர் சிறையில் இருந்தபோது 22,000 கடிதங்கள் எனக்கு வந்தன. அதில், 18,000 கடிதங்களுக்கு பதில்அனுப்பினேன. 1867ம் ஆண்டில் வேலூர் சிறை உருவானதில் இருந்து இத்தனைக் கடிதங்கள் பெற்ற ஒரே கைதிநான் தான்.
சிறைவாசம் என்னை மேலும் வீறு கொண்டு எழச் செய்துள்ளதே தவிர, என்னை முடக்கிப் போடவில்லை. என்னையாரும் முடக்கவும் முடியாது.
பிரமிடுகளும் தோன்றாத காலத்தில் தோன்றிய இந்தப் பூம்புகார் மண்ணில் இருந்து சொல்கிறேன். கண்ணகியைஅவமதித்த ஜெயலலிதாவின் ஆட்சி விரைவில் அழியும் என்று சாபமிடுகிறேன்.
நான் வரும் வழியெங்கும் வாய்க்கால்களை, குளம், குட்டைகளை தூர் வாராமலேயே, தூர் வாரிவிட்டதாககணக்குக் காட்டி பணம் சுருட்டப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் கூறினார்கள். இது குறித்து விரிவானவிசாரணை நடத்த வேண்டும்.
இப்போது நீர் இல்லை என்பதற்காக நில, புலன்களை விற்றுவிடாதீர்கள். விற்கப்படும் நிலத்தால் கிடைக்கும் காசுமூன்று மாத செலவுக்காவது வருமா? உங்கள் பாட்டன், பூட்டன் உங்களுக்கு விட்டுச் சென்ற சொத்து இது. இதைவிற்காதீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எதைத் தருவீர்கள்.
காலம் மாறும், நதிகள் இணையும். அப்போது ஒரு ஏக்கர் வைத்திருப்பவன் எல்லாம் பெரும் முதலாளிகள் என்றநிலைமை வரும். ஆகவே, பண முதலைகளிடம் நிலங்களை விற்றுவிட்டு உங்கள் சந்ததிகளை ஓட்டாண்டிஆக்கிவிடாதீர்கள்.
திமுக தலைமையில் நாங்கள் உருவாக்கிய கூட்டணியை உடைத்துவிடலாம் என சிலர் கனவு காண்கிறார்கள். அதுநடக்காது. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும், மக்களைவைத் தேர்தலில் வென்றதை விடமகததான வெற்றி பெறும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications