வீட்டு வசதி வாரிய ஊழியர்கள் 20 பேர் டிஸ்மிஸ்
சென்னை:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பணிபுரிந்த 20 ஊழியர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 22 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் வீட்டு வசதி வாரியத்தில் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதன் நிர்வாக இயக்குநருக்குஅதிக அதிகாரங்களை அரசு வழங்கியது. அதனையடுத்து வீட்டு வசதி வாரிய ஊழியர்கள் மீது நிலுவையில் உள்ளவழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டன.
அதனடிப்படையில் வீட்டுவசதி வாரியத்தில் பணிபுரிந்த 20 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 22பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள். இதில் பலபேர் பல வருடங்களாக பணிக்கு வராமல் இருந்திருக்கிறார்கள்.
டிஸ்மிஸ் ஆனவர்களில் 4 கண்காணிப்பாளர்கள், 2 இளநிலை உதவியாளர்கள், 6 பணி உதவியாளர்கள், 1 வரைபடஅலுவலர் மற்றும் 2 காவலாளிகள் அடங்குவர்.
வீட்டு வசதி வாரியத்தில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர்களை வேறு இடத்திற்கு மாற்றம்செய்யும் பணியும் நடந்து வருகிறது. 200க்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலைபொறியாளர்கள் ஒரே இடத்தில் 10 ஆண்டுகளையும் தாண்டி பணிபுரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவர்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணியும் தொடங்கியுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக வீட்டு வசதி வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர்தெரிவித்தார். கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும் வாரியத்திற்கு சொந்தமான ரூ. 700 கோடி மதிப்புடையநிலங்களை சட்டத்திற்கு புறம்பாக ஒரு சிலர் சொந்தம் கொண்டாடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தநிலங்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
காண்ட்ராக்டர்களுடன் கோஷ்டி சேர்ந்து கொண்டு மிக பயங்கர ஊழல் நடக்கும் துறைகளில் ஒன்று வீட்டுவசதிவாரியம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரியம் கட்டும் வீடுகள் சில காலத்திலேயே இடிவது, கீறல் விழுவதுவாடிக்கையான விஷயம்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications