கருணாநிதிக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்
சென்னை:
சட்டசபைக்கே வராத திமுக தலைவர் கருணாநிதிக்கு, தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் எத்தனை நாட்கள்நடந்தன என்பது குறித்து விசாரித்து அறிந்து கொள்ளுமாறு குடியரசுத் தலைவருக்கு அறிவுரை கூற தகுதிகிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தஒப்புக் கொண்டுள்ளார். இதற்கு திமுக தலைவர் கருணாநிதி மறைகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இந்த ஆண்டு வெறும் 15 நாட்களே நடந்துள்ளதை குடியரசுத் தலைவர் மனதில்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகசட்டசபைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட திமுக தலைவர் கருணாநிதிக்குவிருப்பம் இல்லை.
இந் நிலையில், சட்டசபைக் கூட்டத் தொடர் 15 நாட்களே நடந்துள்ளதை மனதில் கொள்ளுமாறு குடியரசுத்தலைவருக்கு அறிவுரை கூற அவருக்குத் தகுதி கிடையாது. குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவதன் மூலம், தமிழகசட்டசபை வரலாற்றில் சரித்திரப் புகழ் பெற்ற சம்பவம் நிகழப் போவதை கருணாநிதியால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்த ஒப்புக் கொண்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாகவே, குடியரசுத் தலைவரை சந்திக்க சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் சென்றதையும், அதிமுகஎம்.பிக்கள் குடியரசுத் தலைவரையும் சந்தித்ததையும் முடிச்சுப் போட்டுப் பேசுகிறார்.
மாநில அரசின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் வகையில், தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அரசுக்குஎதிராக விமர்சனம் செய்யுமாறு தூண்டி விடுகிறார். சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் உள்ளிட்ட தமிழக குழுகுடியரசுத் தலைவரை சந்தித்து சட்டசபையில் உரை நிகழ்த்த மட்டுமே அழைப்பு விடுத்தது.
அவர்கள் சந்தித்து விட்டுச் சென்ற பின்னர்தான் அதிமுக எம்.பிக்கள் குழு குடியரசுத் தலைவரை சந்தித்தது. மேலும்,குடியரசுத் தலைவரை சந்திக்க தமிழக குழுவினருக்கு ஆகஸ்ட் 22ம் தேதியே குடியரசுத் தலைவர் மாளிகை அனுமதிவழங்கி விட்டது.
ஆனால், நான் ஆளுநர் ராம் மோகன் ராவை சந்தித்து விட்டு வந்த 28ம் தேதிக்குப் பின்னர்தான் குடியரசுத்தலைவரை தமிழக குழு சந்திக்க சென்றதாக இட்டுக் கட்டிக் கூறுகிறார் கருணாநிதி.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நிலை தடுமாறிய நிலையில் நடந்தும், பேசியும் வருகிறார் கருணாநிதி.அவரது திமிர் அளவு கடந்துவிட்டது. இதன் காரணமாகவே குடியரசுத் தலைவரையே விமர்சிக்கும் அளவுக்கு தரம்தாழ்ந்து சென்று விட்டார். அவருக்கு மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
அரசியல் சட்டப் பதவியில் இருக்கும் ஒரு ஆளுநரை மிக மோசமாக விமர்சிக்கும் போய்விட்டார் கருணாநிதி.ராம்மோகன் ராவை மாற்றிவிட்டு தான் ஆட்டுவிப்பதற்கு எல்லாம் ஆடும் ஒருவரை கவர்னராக்க கருணாநிதிதிட்டம் போடுகிறார்.
ஒலிம்பிக் போட்டிகளைக் காண ஆளுநர் கிரீஸ் சென்றதைக் கூட விமர்சித்துள்ளார். உயர் பதவியில்இருப்பவர்களைக் கூட தனது சிறு புத்தியால் எப்படி எல்லாம் கேவலமாகப் பேச முடியுமோ அப்படிப் பேசிவருகிறார். சுதந்திர தினத்தன்று முதல்வர் தான் கொடியேற்றுவார், ஆளுநர் அல்ல. ஆனாலும் அந்த தினத்தில்ஆளுநர் ஊரில் இல்லாததை சுட்டிக் காட்டி விமர்சித்துள்ளார் கருணாநிதி.
இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications