பெண் பொடா கைதிகள் மருத்துவமனையில் அனுமதி
வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 3 பெண் பொடா கைதிகள்உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் தர்மபுரி காட்டுப் பகுதிக்கு அருகே, நக்சலைட்டுகள் 20 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 6 பேர் பெண்கள். அனைவரும் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திரும்பப் பெறப்படவுள்ள பொடா சட்டத்தை முன் தேதியிட்டு வாபஸ் பெற்று, தங்களை இந்த வழக்கில் இருந்துவிடுவிக்க வேண்டும் என்று கோரி ரீனா மேரி, ரீட்டா மேரி, ஆனந்தி ஆகிய 3 கைதிகளும் வேலூர் சிறையில் 5நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போல சென்னை சிறையிலும் போராட்டம் நடந்ததாகத் தெரிகிறது. ஆனால், இந்த உண்ணாவிரதத்தைசிறைத் துறையும் போலீசாரும் வெளியில் தெரியாமல் மறைத்துவிட்டனர். கைதிகளின் உறவினர்கள் மூலம் தான்விஷயம் வெளியில் வந்தது.
இந் நிலையில் வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த 3 பெண்களின் நிலைமையும் மிகவும்மோசமடைந்ததால் கடந்த திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும் அங்கு சிகிச்சையை ஏற்றுக் கொள்ள அவர்கள் மறுத்து வருகின்றனர்.
ஏற்கனவே சத்யமேரி என்ற மற்றொரு பொடா பெண் கைதி புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications