போராட்டம்: பெங்களூரில் அத்வானி கைது
பெங்களூர்:
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி மீதான வழக்குகளை வாபஸ் பெறக் கோரிபெங்களூரில் சத்யா கிரகப் போராட்டத்தைத் துவக்கிய முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி கைதுசெய்யப்பட்டார்.
உமா மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக கர்நாடக அரசு அறிவித்துவிட்ட நிலையிலும், முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்று தொடங்கியது.
இன்று காலை பெங்களூர் டவுன்ஹால் ரோட்டில் தேசியக் கொடியை அசைத்து இந்த ஒரு வார காலப்போராட்டத்தை அத்வானி துவக்கினார். இதில் பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, அக் கட்சியின்செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி, கர்நாடக மாநில பாஜக தலைவர் ஆனந்த் சர்மாஉள்பட கர்நாடகம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. தொண்டர்களும்ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.
போராட்டத்தினை தொடங்கிய சிறிது நேரத்தில் அத்வானி உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.அத்வானி சதாசிவ நகர் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அனைவரும்விடுவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தின் ஒவ்வொரு நாளும் மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள்ஒவ்வொருவரின் தலைமையில் போராட்டம் நடைபெறும். 8ம் நாள் நடைபெறும் போராட்டத்திற்கு முன்னாள்பிரதமர் வாஜ்பாய் தலைமை தாங்குகிறார்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications