காஞ்சிபுரம் கோவிலில் மேலாளர் படுகொலை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்தில் கோவில் மேலாளர் படுகொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராஜப் பெருமாள் கோவிலில் மேலாளராகப் பணியாற்றி வந்தவர் சங்கரராமன். நேற்று மாலை அவரது வீட்டுக்கு சிலர் வந்து, சங்கர ராமன் எங்கே என்று கேட்டுள்ளனர்.
சங்கரராமன் கோவில் அலுவலகத்தில் இருப்பதாக மனைவி பத்மா கூறியுள்ளார்.
பின்னர் அந்தக் கும்பல் நேராக கோவிலுக்கு சென்றது. அங்கு அலுவலகத்தில் இருந்த சங்கர ராமனை கத்தியாலும்,அரிவாள்களாலும் வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்பியோடிவிட்டது.
கழுத்தில் மிக ஆழமாக வெட்டப்பட்டதால் சம்பவ இடத்திலேயே சங்கர ராமன் பரிதாபமாக இறந்தார். டி.எஸ்.பி.பரணீஸ்வரி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் சமீபத்தில் நகை திருடுபோனது. இதுதொடர்பாக கோவில் ஊழியர்கள் சிலரிடம் சங்கர ராமன்கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவர் படுகொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications