ராஜ் டிவிக்கு எதிராக தொலைத் தொடர்புத்துறை?
சென்னை:
தமிழகத்தின் முக்கிய தொலைக்காட்சி சானலான ராஜ் டிவியின் ஒளிபரப்பிற்கு தடை விதிக்கப் போவதாக மத்தியதொலைத் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
தமிழகத்தில் சன் டிவிக்கு அடுத்த நிலையில் ராஜ் டிவி உள்ளது. ராஜ் டிவி நிறுவனத்தின் சார்பில் ராஜ் டிவி, ராஜ்டிஜிட்டல் பிளஸ், ராஜ் விஸ்ஸா மற்றும் ராஜ் மியூசிக் ஆகிய சானல்கள் நடத்தப்படுகின்றன.
இதில் ராஜ் விஸ்ஸா மற்றும் ராஜ் மியூசிக் ஆகிய சானல்களை ஒளிபரப்புவதற்கு (அப்லிங்க்) முறையான அனுமதிபெறப்படவில்லை என்று கூறி, ராஜ் டிவி நிறுவனத்தின் அனைத்து சானல்களையும் ஒளிபரப்ப ஏன் தடை விதிக்கக்கூடாது என்று கேட்டு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு ராஜ் டிவி குழுமம் சார்பில் பதில் அனுப்பப்பட்டது. இந்தப் பதிலில் திருப்தி அடையாத மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் ராஜ் டிவிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யப் போவதாக அறிவித்தது.
இதை எதிர்த்து ராஜ் டிவி குழும தலைவர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதில், ராஜ் மியூசிக், ராஜ் விஸ்ஸா ஆகிய இரு சானல்களையும் அப்லிங் செய்வதற்கு அனுமதி கோரி கடந்தஆண்டு மே மாதம் விண்ணப்பம் செய்தோம்.
அப்போது 18 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் இரு சானல்களையும் ஒளிபரப்புமாறு மத்திய அரசு கூறியதால்,அந்த அலைவரிசையில் இரு சானல்களையும் ஒளிபரப்பினோம்.
பின்னர் கடந்த மார்ச் மாதம் மீண்டும் இரு சானல்களுக்கும் தனித் தனியாக விண்ணப்பித்தோம். இதைத் தொடர்ந்துசோதனை அடிப்படையில் இரு சானல்களையும் ஒளிபரப்பு செய்து வந்தோம். கடந்த ஆண்டு ஜூலை மாதம்மத்திய அரசிடமிருந்து இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து இரு சானல்களின் ஒளிபரப்பையும் நிறுத்தி விட்டோம். வேண்டும் என்றே நாங்கள் விதி மீறலில்ஈடுபடவில்லை. உரிமம் வழங்குவதற்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளோம்.உரிமக் கட்டணத்தையும் அபராதத் தொகையுடன் கடந்த ஜூலை மாதமே செலுத்தி விட்டோம்.
எனவே உரிமத்தை ரத்து செய்துள்ளது சட்ட விரோதமானது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தார்.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக சன் டிவி அதிபர் கலாநிதி மாறனின் தம்பி தயாநிதி மாறன்இருப்பது குறிப்பிடத்தக்கது.- ராஜ் டிவிக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் கடந்த ஆண்டேதொடங்கியிருந்தாலும், இப்போது இந்த விவகாரத்தில் வேகம் காட்டப்படுவதற்கும் தயாநிதிக்கும் முடிச்சுபோடப்படுகிறது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications