சோ.பாவிடம் வாசன், ப.சி நலம் விசாரிப்பு
மதுரை:
கார் விபத்தில் பலத்த காயமடைந்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோ.பாலகிருஷ்ணனை மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோர் மருத்துவமனையில் சந்தித்து நலம்விசாரித்தனர்.
ராமநாதபுரத்திலிருந்து நேற்று மதியம் பரமக்குடி நோக்கி சோ.பா. காரில் வந்து கொண்டிருந்தபோது, சைக்கிளில்நாகநாதன் என்பவர் குறுக்கே வந்தார். அவர் மீது மோதாமல் இருக்கும் பொருட்டு, காரை டிரைவர் திருப்பினார்.அப்போது அருகே இருந்த முருகன் கோயில் சுவர் மீது கார் மோதியது.
இதில் முன் சீட்டில் அமர்ந்திருந்த சோ.பாலகிருஷ்ணனுக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. கார்டிரைவர் ராமச்சந்திரன், சோ.பா.வின் உதவியாளர் ஆனந்தக்குமார் ஆகியோருக்கு லேசான காயமும், ரோட்டின்குறுக்கே வந்த நாகநாதனுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது.
நாகநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்தார். சோ.பா. மதுரை அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சோ.பா.வின் முதுகுத் தண்டில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்குணமடைய ஒருவார காலம் ஆகும் எனவும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந் நிலையில்ப.சிதம்பரம், வாசன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாலகிருஷ்ணனிடம் உடல் நலம் விசாரித்தனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications