ரஷ்யா: பலி 333 ஆனது- 260 பேரை காணவில்லை

Subscribe to Oneindia Tamil

பெல்சன்:

தென் ரஷ்ய நகரான பெல்சனில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் தீவிரவாதிகளுக்கும் ரஷ்ய ராணுவத்தினருக்கும்நடந்த சண்டையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 333 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 260 பேரைக் காணவில்லை,அவர்களது உடல்களும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், இடுபாடுகளில் இருந்துஇதுவரை 394 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பல சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு முற்றிலும்சிதைந்துள்ளன என்றார்.

ஆனால், ரஷ்யா அரசோ இதுவரை பலியானோர் எண்ணிக்கை 333 என்று கூறியுள்ளது. இதற்கிடையேதீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட பல குழந்தைகள் உள்பட 260 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.காயமடைந்தவர்கள் பட்டியலில் அவர்களது பெயர் இல்லை, மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிலும் அவர்கள் இல்லை, அவர்களது உடல்களும் கிடைக்கவில்லை.

இதனால் உறவினர்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர். இவர்களும் பலியாகிவிட்டனரா, சாவுஎண்ணிக்கையை மறைக்க ரஷ்ய அதிகாரிகள் இந்த உடல்களை கணக்கில் காட்டாமல் கொண்டுபோய்விட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பள்ளிக்குள் மொத்தம் 1,184 பிணைக் கைதிகள் இருந்ததாகவும், அதில் 448 பேர் மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 69 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் ஒரு தகவல்தெரிவிக்கிறது.

இதற்கிடையே, இந்தக் கோர சம்பவத்துக்கு பொறுப்பேற்று, ரஷ்ய உள்விவகாரத் துறை அமைச்சர் காஸ்பெக்ட்ஸண்டியெவ் பதவி விலகியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து ரஷ்யாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குளறுபடிகளை நீக்க அதிபர் விளாடிமிர்புடின் உத்தரவிட்டுள்ளார். இந்த பிணைக் கைதிகள் விவகாரத்தை ரஷ்யா கையாண்ட விதம் உலகளவில் பெரும்கண்டனத்தை கிளப்பியுள்ளது.

செசன்ய விவகாரம் ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறி அதில் யாரையும் தலைவிட விடாமல் இருந்ததுரஷ்யா, ஆனால், இப்போது உலகளாவிய தீவிரவாத பிரச்சனையில் ஒரு அங்கம் தான் செசன்ய விவகாரம் எனபுடின் கூறியுள்ளார்.

கலாம் - சோனியா ஆறுதல் கடிதம்:

இந் நிலையில், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் புடினுக்குஆறுதல் கடிதம் அனுப்பியுள்ளனர். கலாம் தனது கடிதத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா முழு ஒத்துழைப்புஅளிக்கும் என்றும் இந்த சம்பவத்திற்கு ஆறுதல் கூறுவதாகவும் எழுதியுள்ளார்.

சோனியா தனது கடிதத்தில் இது போன்ற சம்பவங்கள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது என்றும் இதுபோன்ற தீவிரவாத செயல்களை ஒழிக்க ரஷ்யா எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற இந்தியா துணை செய்யும்என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+